ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக் கூடிய பாம்பன் ரயில்வே பழைய பாலம் கடந்த 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு நூறு ஆண்டுக்கு மேல் ஆகிறது. தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழைய பாலம் சேவை நிறுத்தப்பட்டது. ரூ.535 கோடி செலவில் புதிய பால் அமைக்கும் பணி 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
புதிய ரயில்வே பாலத்தின் நடுவே படகுகள் மற்றும் கப்பல்கள் கடந்து செல்வதற்காகத் தானியங்கி தூக்கு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தானியங்கி தூக்கப்படும் வீல்கள் பொருத்தப்பட்டு தானியங்கி தூக்கு பாலம் நடுவே இணைக்கப்பட்ட நிலையில், அதில் ரயில் என்ஜின் கொண்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. மீதமுள்ள பகுதிகளில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறும் என தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
#India's first ever vertical lift railway sea bridge to become a reality soon!
— Southern Railway (@GMSRailway) August 4, 2024
As part of commissioning of the new #PambanBridge, a successful trial run of Tower Car on the entire bridge portion has been conducted today#SouthernRailway #TamilNadu pic.twitter.com/W8Y3YmUP9H
இந்தப் பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள், பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இந்தாண்டோ அல்லது அடுத்த ஆண்டு முதல் மாதத்தில் புதிய ரயில்வே பாலம் திறக்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!