ETV Bharat / state

ராஜபாளையம், தென்காசி வழியாக கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்! - Chennai to Kochuveli Special train - CHENNAI TO KOCHUVELI SPECIAL TRAIN

Chennai to kerala special train: கோடை காலத்தை முன்னிட்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து ராஜபாளையம் வழியாக கேரளா கொச்சுவேலிக்கு சிறப்பு ரயிலை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் புகைப்படம்
ரயில் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 5:37 PM IST

மதுரை: கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனிடையே, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

இந்த நிலையில், தாம்பரத்திலிருந்து – கேரள மாநிலம் கொச்சுவேலிக்கும், மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து தாம்பரத்திற்கும் வாரம் இருமுறை கோடை கால ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த கோடை கால தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலானது (06035), வரும் 16-ம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை ஒவ்வொரு வியாழன் மற்றும் சனிக்கிழமையும் தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

அதேபோல், கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06036) வருகிற 17-ஆம் தேதியில் இருந்து ஜூன் 30-ஆம் தேதி வரை ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும், கொச்சுவேலியில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 7.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன் கோவில், பாம்பகோயில் சந்தை, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா, கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு பெட்டியுடன் கூடிய மின்சார ஜெனரேட்டர் பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் பேட்டி விவகாரம்: ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது - டெல்லியில் தமிழக போலீசார் அதிரடி - Youtuber Felix Gerald Arrested

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.