ETV Bharat / state

மின்தட பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு - SOUTHERN RAILWAY

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின்தடம் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கின்ற காரணத்தால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்
ரயில் (Credits - southern railway X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 10:39 PM IST

திருநெல்வேலி : திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் பாதை மின்தடம் மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத ரயில் (06676) அக் 15 முதல் நவ 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத ரயில் (16731) அக் 15 முதல் நவ 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக் 31) தவிர மற்ற நாட்களில் தாழையுத்து - திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள திருநெல்வேலி, பாளையம்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசேரத் கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்காது.

இதையும் படிங்க : நவராத்திரி, தீபாவளி ஸ்பெஷல்.. 6 பொது பெட்டிகளுடன் சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் - பாலக்காடு முன்பதிவு இல்லாத ரயில் (16732) அக் 15 முதல் நவ 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.

அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் (06687) திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.