கோயம்புத்தூர்: சேலம் கோட்டம் தெற்கு ரயில்வேயில் (Southern Railway) கூட்ட நெரிசல்மிக்க ரயில் வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சேலம் கோட்டத்திலிருந்து வாரம் ஒருமுறை அல்லது வாரத்திற்கு இருமுறை வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
மேலும், பயணிகளின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06030) திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 07.07.2024 முதல் 28.07.2024 வரை மாலை 07.00 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தைச் சென்றடையும்.
அதேபோல், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06029) மேட்டுப்பாளையத்தில் இருந்து 08.07.2024 முதல் 29.07.2024 வரை திங்கள்கிழமைகளில் மாலை 07.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, படுக்கை வகுப்பு, முன்பதிவு இல்லாத வகுப்புகள் உள்ளது எனவும், இந்த ரயில்கள் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலையாச்சிப்பேட்டை, கோயம்புத்தூர், பொள்ளாச்சிப்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் சேலம் கோட்டம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: நொய்யல் ஆற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...கண்கவரும் ட்ரோன் காட்சிகள்! - NOYYAL RIVER