ETV Bharat / state

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் நாளை ரத்து! - Chennai Electric trains cancelled

Chennai Electric trains cancelled: பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) நான்காவது வாரமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

Chennai Electric trains canceled due to maintenance work on march 3
மின்சார ரயில்கள் நாளை ரத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 6:55 AM IST

சென்னை: சென்னையில் தாம்பரம் - கோடம்பாக்கம் மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், தொடர்ந்து 4வது வாரமாக சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும், புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த அறிக்கையில், "வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ரயில்வே தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கத்திலும் சுமார் 44 மின்சார அணைகள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், பொதுமக்கள் வசதிக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், மெட்ரோ ரயில்களைக் கூடுதலாக இயக்கவும், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்காவது வாரமாக ரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிக்காக இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல், மீண்டும் வழக்கம்போல் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காக 3 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவை வருகை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.