ETV Bharat / state

புதிய தலைவரைத் தேடுகிறதா தமிழக பாஜக? அண்ணாமலை மீதான அதிருப்தியால் முடிவு என தகவல்! - TN BJP looking for a new leader - TN BJP LOOKING FOR A NEW LEADER

TN BJP Leader Annamalai K: அண்ணாமலை மீதான அதிருப்தியால், புதிய தலைவரை தேடுகிறதா தமிழக பாஜக என்ற கேள்வி உள்பட பல்வேறு அரசியல் தகவல்களை மூத்த பத்திரிகையாளர் ஷபீர் அளிக்கும் விளக்கம் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

Annamalai
அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 7:20 PM IST

சென்னை: 18வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சி ஆதரவுடன் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடி உட்பட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 30 மத்திய அமைச்சர்கள், 36 இணை அமைச்சர்கள் மற்றும் 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் வகையில் 11 மத்திய அமைச்சர் பதவி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோருக்கு கடந்த முறை போலவே அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையான பிரதமராகப் பொறுப்பேற்ற மோடியின் அமைச்சரவையில் ஜே.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார், குமாரசாமி உள்ளிட்ட புதுமுகங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பாஜக தனிக்கூட்டணி அமைத்து 23 இடங்களில் நேரடியாக போட்டியிட்டு தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, வேலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திருவள்ளூர் தொகுதிகளில் இரண்டாம் இடமும், மேலும் கூட்டணித் தலைவர்கள் நேரடியாக களம் கண்டதில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சௌமியா அன்புமணி ஆகியோரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.

இதன் மூலம் பாஜகவின் வாக்கு சதவிகிதத்தை அண்ணாமலை உயர்த்த முயற்சித்தார். ஏற்கனவே, பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்த பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. இது போலவே நிச்சயமாக அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர்கள் புதுமுகங்கள் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லை.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தொடருவாரா என்ற இதுபோன்ற கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது. அப்போது பதில் அளித்த அவர், “பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 300 தொகுதிக்கு மேல் பெற்று ஆட்சி அமைத்திருந்தால், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி நிச்சயமாக கொடுத்திருப்பார்கள்.

தனிப்பெரும்பான்மை கிடைக்காததாலும், வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் மத்திய அமைச்சர் பதவியை விரும்பினார்கள். எனவே, மூன்று பேருக்கும் மத்தியில் மந்திரி பதவி கொடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள எல்.முருகனுக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்துள்ளார்கள்.

அதிமுக - பாஜக உடன் கூட்டணி முறிவு என்பது கொள்கையால் ஏற்படவில்லை. தனிநபர் பிரச்னையால் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்காததற்கு அண்ணாமலை தான் காரணம் என மத்திய பாஜகவில் கருத்து நிலவுகிறது. பாஜக பெரும் கூட்டணியுடன் போட்டியிட்டும், கூட்டணித் தலைவர்களை நேரடியாக களம் காண வைத்தும் தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது மத்தியில் ஒரு கருத்தும் உள்ளது.

எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் நீண்ட நெடிய காலமாக பாஜகவில் செயல்பட்டவர்கள் என்பதால், மத்திய அமைச்சர், ஆளுநர் பொறுப்புகள் வழங்கப்பட்டது. அண்ணாமலை தலைவராக பொறுப்பு ஏற்று மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால், மத்திய அமைச்சர் பதவி வழங்காததற்குக் காரணமாக இருக்கலாம்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அண்ணாமலை தமிழக தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை நோக்கி நகரும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே பாஜக விரும்பும் என்பதால் 2026 சட்டமன்ற தேர்தல் முன்பாக அண்ணாமலை பதவியில் மாற்றப்பட வாய்ப்புள்ளது.

அதிமுக உடன் இணக்கமாகச் செயல்படும் தலைவர்களில் ஒருவர் பாஜக புதிய தலைவராக பதவிக்கு வரலாம். பாஜக புதிய தலைவர் பதவிக்கு தமிழிசை சௌந்தரராஜன் அல்லது வானதி சீனிவாசனுக்கு அதிக வாய்ப்புள்ளது. அண்ணாமலைக்குத் தலைவர் பதவி பறிக்கப்பட்டால் அவருக்கு அண்டை மாநிலங்களில் பொறுப்புகள் ஏதேனும் வழங்கப்படலாம். அண்ணாமலையின் செயல்பாடுகளை தற்போதே மத்திய பாஜக கட்டுக்குள் வைக்கத் துவங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் தேர்தலுக்குப் பிறகு அவருடைய குரல் பெரிதாக கேட்கவில்லை" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆந்திர பிரதேச முதலமைச்சராக நாளை சந்திரபாபு நாயுடு பதவியேற்பு! துணை முதலமைச்சர் பவன் கல்யான்! - Andra Pradesh CM oath Ceremony

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.