ETV Bharat / state

திருச்சியில் த.வெ.க. முதல் மாநாடு? களத்தில் இறங்கிய புஸ்ஸி ஆனந்த்! - TVK manadu in Trichy

TVK maanadu in Trichy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் கோப்புப்படம்
நடிகர் விஜய் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 10:47 PM IST

திருச்சி: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி மாவட்டம், வட்டம், ஊராட்சி, நகராட்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். மேலும், அவரது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இடங்களை மாநாடு நடத்துவதற்கான இடம் குறித்து புஸ்ஸி ஆனந்த ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சி பொன்மலை பகுதியில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில், தமிழ வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1ஆம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனிடம், ஜி கார்னர் மைதானத்தில் தங்கள் கட்சியின் மாநாட்டை நடத்துவதற்காக 60 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், அதற்கான வைப்புத் தொகை மற்றும் வாடகை தொகையை கட்சியின் சார்பாக செலுத்துவதாக கூறி மனு ஒன்றை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், அளித்த மனுவில் செப்டம்பர் 20ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிகளில் ஒரு நாளில் தங்களது மாநாடை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பதில் அளித்த திருச்சி கோட்டை ரயில்வே மேலாளர், தேதியை குறிப்பிட்டு பிறகு, இடத்திற்கான அனுமதியை ரயில்வே போர்டு பரிசீலனை செய்து பதில் அளிக்கும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) திருச்சி ரயில்வே நில அளவை அதிகாரிகள், ஜி கார்னர் மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த ஜி கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் பொதுக் கூட்டங்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வாக்குவாதம் செய்த முன்னாள் அமைச்சர்; தருமபுரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.