ETV Bharat / state

பெற்ற தந்தையை வேன் ஏற்றிக்கொன்ற மகன்.. சொத்துக்காக அரங்கேறிய கொடூர சம்பவம்! - chennai son murdered father - CHENNAI SON MURDERED FATHER

father murdered by son: பூந்தமல்லியில் சொத்து பிரச்னையில் தந்தையை வேன் ஏற்றி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

வெங்கடேஷ், தந்தை ராஜேந்திரன்
வெங்கடேஷ், தந்தை ராஜேந்திரன் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 7:12 PM IST

சென்னை: பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாலீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (63). இவரது மகன் வெங்கடேசன் (26). நேற்று இரவு ராஜேந்திரன் வீட்டின் அருகே இருந்த இவருக்குச் சொந்தமான இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் அவரை இடித்து விட்டு நிற்காமல் சென்றது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போலீசார், ராஜேந்திரன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதில் அவரது மகன் வெங்கடேசனே வேனை வைத்து தந்தையை ஏற்றி கொலை செய்தது அம்பலமானது. இது குறித்து போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாவது; ராஜேந்திரனுக்கும் அவரது மகன் வெங்கடேசனுக்கும் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது. ராஜேந்திரனுக்கு உள்ள சொத்துக்களை தனது பிள்ளைகளுக்கு எழுதி வைக்கும் எண்ணத்தில், சம்பவத்தன்று தனது இடத்தை வாகனம் வைத்து சுத்தம் செய்துள்ளார்.

இந்த நிலையில், தனக்கு தந்தை சொத்தை கொடுக்க மாட்டார் என ஆத்திரத்தில் இருந்து வந்த வெங்கடேசன், நேற்று இரவு காலி இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது தான் சொந்தமாக இயக்கி வந்த வேனை தந்தையின் மீது ஏற்றி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.

மேலும், வேனை ஏற்றி தந்தையை கொன்று விட்டால் விபத்து நடந்தது போல் இருக்கும் என நாடகமாடியதும் அம்பலமானது. இதையடுத்து, தந்தையை வேன் ஏற்றி கொலை செய்து விட்டு வேனுடன் தலைமறைவான மகன் வெங்கடேசனை பூந்தமல்லி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.