ETV Bharat / state

அம்ரித் பாரத் திட்டத்தால் 100 ஆண்டுகளாக செயல்படும் மயிலாடுதுறை ஆர்எம்எஸ் போஸ்ட் ஆபிஸ் மாற்றமா? எகிறும் எதிர்ப்பு! - Rail Mail Service post office - RAIL MAIL SERVICE POST OFFICE

Rail Mail Service post office: மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் உள்ள ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்திற்கு ரயில்வே நிர்வாகம் வேறு இடம் வழங்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆர்எம்எஸ் அலுவலகம், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம்
ஆர்எம்எஸ் அலுவலகம், சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 6:55 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஆர்எம்எஸ் (Rail Mail Service) என்ற தபால் நிலையம் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இது மாலை 6 மணி முதல் காலை 6.40 மணி வரை இயங்கும். இரவு நேரத்தில் விரைவு தபால்கள் அனுப்புவதற்கு பொதுமக்கள் இந்த தபால் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 77 தலைமை மற்றும் துணை அஞ்சலகத்தில் இருந்து வரும் தபால்கள், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள 54 தபால் நிலையங்களில் இருந்து வரும் தபால்கள், பதிவுக் கட்டுகளை ஊர்வாரியாக பிரித்து உடனுக்குடன் அனுப்பும் பணி இங்கு நடைபெற்று வருகிறது.

இதில் 36 நிரந்தரப் பணியாளர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அஞ்சல் துறை மூலம் பாஸ்போர்ட், அரசு வேலைக்கான பணி ஆணைகள், பான் கார்டு, வங்கி ஏடிஎம் கார்டுகள் உட்பட பல்வேறு முக்கிய சேவைகள் இரவு நேரத்தில் இங்கு செய்யப்படுகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷனில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், ஆர்எம்எஸ் தபால் அலுவலகம் இயங்கிய இடத்தின் ஒரு பகுதியை அகற்றிவிட்டு, படிக்கட்டுக்கள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்திற்கு வேறு இடம் வழங்குவதாக ரயில்வே நிர்வாகம் கூறி பல மாதங்கள் ஆகியும் இதுவரை இடம் ஒதுக்கி கொடுக்காததால், ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்தை திருவாரூர் ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்துடன் இணைக்கும் முடிவை ஆர்எம்எஸ் அலுவலக உயரதிகாரிகள் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் அப்பர் சுந்தரம் கூறுகையில், "மயிலாடுதுறை ரயில்வே ஜங்ஷன் ஒன்றாவது நடைமேடை பகுதியில் இயங்கி வந்த ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்தை தற்போது விரிவாக்கப் பணிக்காக இடத்தை காலி செய்யச் சொல்லி வேறு இடத்தை தருவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது.

ஆனால், தற்போது வரை இடம் கொடுக்காமல் கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், ஆர்எம்எஸ் தபால் அலுவகத்தை உயரதிகாரிகள் திருவாரூர் அலுவலகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அலுவலகத்தை மாற்றம் செய்வதால் அஞ்சல் சேவைகள் பாதிப்படைவதோடு, பதிவுத் தபால்கள், விரைவு பதிவு தபால்கள் உரிய நேரத்தில் மக்களுக்குச் சென்றடைவதில் காலதாமதம் ஏற்படும். இதனால் உடனடியாக ரயில்வே நிர்வாகம் மயிலாடுதுறை ஆர்எம்எஸ் தபால் அலுவலகத்திற்கு மாற்று இடத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வருவதாக" சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : ஃபார்முலா 4 கார் பந்தயம்; எல்.முருகன் முக்கிய கேள்வி! - Formula 4 car racing

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.