ETV Bharat / state

“வயித்திலே அடிப்பது”.. அயோத்தி நேரலை எல்இடி திரை அகற்றம் - நிர்மலா சீதாராமன் காட்டம்!

Removed the LED screens: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா நிகழ்வைக் காணவிருந்த எல்இடி திரைகளை தமிழக காவல் துறையினர் அகற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ANI

Published : Jan 22, 2024, 11:34 AM IST

Updated : Jan 23, 2024, 9:05 AM IST

சென்னை: சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலில் இருந்து, அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வினை நேரலையில் காண எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை, காவல் துறையினர் அகற்றி உள்ளதாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த எல்இடி திரைகள் மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பலரும் அயோத்தி நேரலையைக் காண்பதற்காக வைக்கப்பட்டு இருந்ததாக எஸ்ஜி சூர்யா தனது X தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  • In Kanchipuram district alone, 466 LED screens were arranged for live telecast of @narendramodi in Ayodhya. In more than 400 of those places the police has either confiscated the screens or deployed force to prevent the live telecast.
    LED suppliers are fleeing with fear. The…

    — Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் அவர் வெளியிட்டுள்ள X சமூக வலைத்தளப் பதிவில், “காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கோயிலில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அயோத்தி ராமர் கோயிலில் நடைபெற உள்ள பிரான் பிரதிஷ்டா நிகழ்வினை நேரலையில் காண இருந்தார். ஆனால், தற்போது கோயில் வளாகத்திற்குள் நுழைந்த தமிழ்நாடு காவல் துறையினர், அங்கிருந்த எல்இடி திரைகளை அகற்றினர். இது என்ன செயல்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். 466 எல்இடி திரைகள் ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நேரலைக்கு தயார் நிலையில் இருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட இடங்களில் புகுந்த காவல்துறையினர், திரைகளை பறிமுதல் செய்கின்றனர் அல்லது நேரலை ஒளிபரப்பை தடை செய்கின்றனர். இதனால், எல்இடி தொழிலாளர்கள் பயந்து ஓடுகின்றனர். திமுகவின் இந்து விரோதப்போக்கு சிறிய தொழில்களையும் தாக்குகிறது, அதாவது ‘வயித்திலே அடிப்பது’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு அரசால், தமிழ்நாடு காவல்துறை தவறாக பயன்படுத்தப்படுகிறது. இந்து எதிர்ப்பு திமுகவால், அவர்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள். நாட்டின் எந்த குடிமகனும் பிரதமரைப் பார்க்க மறுக்க முடியுமா? திமுக தனது தனிப்பட்ட பிரதமர் வெறுப்பை வெளிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை நிகழ்வையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், பஜனை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டதாக நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார். ஆனால், இது திட்டமிட்ட வதந்தி எனக் குறிப்பிட்ட தமிழ்நாடு அரசு, எந்தவொரு தடையும் அரசால் பிறப்பிக்கப்படவில்லை என தெரிவித்தது.

இதையும் படிங்க: அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா; தரிசிக்க திரண்ட திரைப்பிரபலங்கள்.. முழு விவரம்!

Last Updated : Jan 23, 2024, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.