ETV Bharat / state

பெட்ரோலால் நடந்த அசம்பாவிதம்..கோவையில் 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு.. 4 பேருக்கு பயங்கர தீக்காயம் - Coimbatore Accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 9:18 AM IST

Coimbatore Fire Accident: கோவை மாவட்டம் முத்துக்கவுண்டன் புதூரில் ஓட்டுனர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை தீ விபத்து
கோவை தீ விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

கோவை: கோவை மாவட்டம், முத்துக்கவுண்டன் புதூரில் ஓட்டுனர்கள் தங்கியிருந்த அறையில் இன்று (ஜூலை16) ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் சின்னகருப்பு, முத்துகுமார், அழகுராஜ் ஆகிய 3 பேர் சிக்கி உயிரிழந்தனர்.

தென் மாவட்டத்தை சார்ந்த அழகுராஜா, முத்துகுமார் ஆகியோர் இருகூர் பகுதியில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசனில் ஓட்டுனர்களாக பணிபுரிகின்றனர். மேலும், இவர்களுடன் 4 பேர் கோவை மாவட்டம், முத்துக்கவுண்டன்புதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி லாரி ஓட்டுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு 12 மணி அளவில் மதுபோதையில் இருந்த ஓட்டுனர்கள் சிலிண்டர் கேஸ் அடுப்பின் அருகில் வைத்துக் கொண்டே பெட்ரோலை கேனில் ஊற்றி உள்ளனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முத்துகுமார், அழகுராஜ் ஆகிய 3 ஓட்டுனர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களுடன் இருந்த இந்த தீ விபத்தில் சிக்கி பாண்டீஸ்வரன், மனோஜ், வீரமணி, தினேஷ் ஆகியோர் காயமடைந்தனர். இதனை அடுத்து அவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர், சூலூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் காயம் அடைந்த 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் 4 பேரில் இருவர் 80 சதவீத காயங்களுடனும், மற்ற இருவர் 45 சதவீத காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சூலூர் போலீசார் ஒருவர் கூறுகையில், "ஓட்டுனர்கள் தங்கி இருந்த அறையில் இருந்த 10 லிட்டர் பெட்ரோல் கேனில் இருந்து பாட்டிலுக்கு பெட்ரோலை ஊற்றும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த ஓட்டுனர்கள் அவர்கள் தங்கி இருத்த சிறிய அறையின் ஒரு புறம் சமைத்துக் கொண்டும் மற்றொருபுறம் பெட்ரோலை மாற்றும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும்" தெரிவித்தனர். கோவையில் பெட்ரோலை வேறொரு கேனுக்கு மாற்றும் போது ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை! - Madurai NTK EXECUTIVE MURDER

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.