ETV Bharat / state

புதுக்கோட்டை சிறையில் சிக்கன் சாப்பிட்ட 7 கைதிகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு! - Pudukkottai Jail

புதுக்கோட்டை மாவட்ட கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதிகள் ஏழு பேர் வயிற்றுப்போக்கு வாரணமாக அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட சிறை
புதுக்கோட்டை மாவட்ட சிறை (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 4:34 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டக் கிளைச் சிறையில் 450-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேற்று(திங்கட்கிழமை) மதியம் வழங்கப்பட்ட சிக்கனுடன் கூடிய உணவால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

விசாரணைக் கைதிகளான தஞ்சையைச் சேர்ந்த செங்கோல்சேசு (42), அறந்தாங்கியைச் சேர்ந்த உலகநாதன் (55), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராமு (44), தஞ்சையைச் சேர்ந்த நேரு (57), ஆலங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணி (58), ஒரத்தநாட்டைச் சேர்ந்த செல்வம் (31), மணமேல்குடியைச் சேர்ந்த அஜிக்குமார் (28) ஆகிய 7 பேருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிறையில் முதலுதவி சிகிச்சை அளித்தும் வயிற்றுப்போக்கு பிரச்சனை தீராததால் இவர்கள் ஏழு பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிறைவாசிகளுக்கு உணவு ஒவ்வாமையால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சிறையிலும் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு பிறர் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.