ETV Bharat / state

அமலாக்கத் துறை வழக்கு: செந்தில் பாலாஜி மனு மீது ஜூன் 19 இல் உத்தரவு! - EX minister Senthil Balaji - EX MINISTER SENTHIL BALAJI

Senthil Balaji: சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி புகைப்படம்
செந்தில் பாலாஜி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 9:22 PM IST

சென்னை: அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி அசல் செலான்களை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டுமென அவர் கோரியிருந்தார்.

மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் காலத்தில், தனியார் வங்கிகளில் பணிபுரிந்த ஊழியர்களின் விவரங்களை வழங்கக் கோரியும், 2016 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் பெயர்களில் டெபாசிட் செய்தவர்களின் பான் கார்டு விவரங்களையும் தெரிவிக்க, வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் ம. கெளதமன் ஆஜராகி, அமலாக்கத் துறையால் தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி, வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய உள்ள நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 91ன் படி ஆவணங்களைக் வழங்கக் கோரி மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்தல்ல என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூன் 19ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சாதி மறுப்பு திருமணம் - நெல்லை கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடல் - Nellai Communist office attack

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.