ETV Bharat / state

'விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணிக்கு லாபம்'.. என்ன சொல்கிறார் செல்வப்பெருந்தகை..? - SELVAPERUNTHAGAI ON VIJAY

ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு பற்றி தவெக தலைவர் விஜய் பேசியதை, காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை பேட்டி
செல்வப்பெருந்தகை பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2024, 3:35 PM IST

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (நவ.1) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '' இன்று முதல் நாளை மறுநாள் வரை வயநாட்டில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழக காங்கிரஸ் சார்பில் வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்'' என்றார்.

மேலும், ''தமிழ்நாட்டில் காங்கிரசின் கட்டமைப்பை வலுப்படுத்த வருகிற 5 ஆம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் தொடங்குகிறது. இந்த பணிகள் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிவடையும். அதைத் தொடர்ந்து கிராம தரிசனம் என்ற பெயரில் கிராமங்கள் நோக்கி செல்கிறோம். கிராமங்களில் கட்சி வலிமையாகவும், உயிரோட்டமாக இருந்தால் தான் பிற கட்சிகள் எங்களை தேடி வரும்'' என கூறினார்.

இதையும் படிங்க: பைக்கில் பட்டாசு எடுத்துச் சென்றபோது விபரீதம்! அருகில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு பட்டாசு வெடித்ததில் இளைஞர் பலி

தொடர்ந்து பேசிய அவர், '' தற்போது ஆட்சி அதிகாரப் பகிர்வு பேச்சு எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவை எடுக்க வேண்டியது அகில இந்திய தலைமை தான். இப்போது நாங்கள் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம்.

தவெக தலைவர் விஜய், அதிகார பகிர்வு பற்றி பேசியதை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. விஜய் அரசியல் வருகை இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதற்கு மிகவும் லாபகரமாக இருக்கும். தமிழகத்தில் பெருந்தலைவர் ‌காமராஜர் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கிதான் எங்கள் பயணம் இருக்கும்.

தமிழகத்தில் வருங்காலங்களில் ஆட்சியில் பங்கு அளிப்பது குறித்து மக்கள் தான் முடிவு செய்வார்கள். இந்தியா கூட்டணியில் எந்த சலனமும், சங்கடமும் இல்லை. தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால் நாட்டில் புரட்சி ஏற்படும்'' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.