ETV Bharat / state

“சுதந்திரப் போராட்ட வீரர்கள் வரலாற்றை மறைப்பதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது” - செல்வப்பெருந்தகை சாடல்! - K Selvaperunthagai - K SELVAPERUNTHAGAI

K.Selvaperunthagai: சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் புகழையும், வரலாற்றையும் மறைக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.

செல்வப்பெருந்தகை புகைப்படம்
செல்வப்பெருந்தகை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 3:44 PM IST

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது உருவச்சிலை மற்றும் அங்கு வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு (Credits -ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது, “வீரர் அழகுமுத்துக்கோன் வரலாற்றை யாரும் மறைக்க முடியாது. சுதந்திரப் போராட்ட வீரர்கள், போராட்ட தலைவர்கள் மற்றும் தியாகிகளின் வரலாற்றை மறைப்பதற்கும், மறுப்பதற்கும் ஒரு கூட்டம் உள்ளது. வீரர் அழகுமுத்துக்கோன் புகழை மறைக்க ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது. அதனை ராகுல் காந்தி முறியடிப்பார். இந்த மண்ணில் மனிதர்கள் உள்ளவரை அழகுமுத்துக்கோன் வரலாற்றை மறைக்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் திருவுருவச்சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது, “சுந்தரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான நாள். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததில் மகிழ்ச்சி. சுதந்திரப் போராட்டத்திற்கு அரும்பாடுபட்ட முதல் மனிதர் தமிழகத்தைச் சேர்ந்தவர்” என்றார்.

இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்..திரளான பக்தர்கள் தரிசனம்! - Chidambaram Nataraja Temple

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.