ஈரோடு: ஈரோட்டில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த நிறுவனத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 701 கிலோ நெகிழிப் பொருட்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்நிறுவனம் செயல்படத் தடை விதித்து அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்துள்ள பள்ளபாளையத்தில் அசோக் குமார் மற்றும் கீதா தேவி ஆகியோருக்குச் சொந்தமான கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: துபாயில் இருந்து தங்கப்பசை கடத்தல்; சென்னை விமான நிலைய உணவக ஊழியர் சிக்கியது எப்படி?
இதனையடுத்து தகவலின் பேரில் நேற்று (பிப்.11) அதிகாரிகள் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் தடை விதித்திருந்த பிளாஸ்டிக்கை, அங்கு அனுமதி இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாகத் தயாரித்து விற்பனை செய்வதற்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த நிறுவனத்தில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 701 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தொடர்ந்து அந்த நிறுவனம் அங்கு செயல்படத் தடை விதித்த அதிகாரிகள், அதற்கான நோட்டீஸையும் அப்பகுதியில் ஒட்டினர்.
இதையும் படிங்க: விருதுகளை வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கே மத்திய அரசு வழங்க வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் எம்பி