ETV Bharat / state

வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் என்னென்ன? - VEMBAKOTTAI EXCAVATION

VEMBAKOTTAI EXCAVATION: சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3-ஆம் கட்ட அகழ்வாய்வில் சுடு மண்ணாலான வடிதட்டு (சல்லடை) உட்பட, இதுவரை சுமார் 1150-க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட வடிதட்டு
கண்டெடுக்கப்பட்ட வடிதட்டு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 6:18 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18-ஆம் தேதி மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணியை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த 3-ஆம் கட்ட அகழ்வாய்வு பணியின் போது சுடு மண்ணாலான வடிதட்டு (சல்லடை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சூடு மண்ணால் ஆன புகைப்பிடிப்பான் கருவி மற்றும் சுடுமண் குழாய், சங்கு வளையல்கள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது.

அதேபோல் நாயக்கர் கால செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில், புழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகை நாணயங்களில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த நாணயத்தில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது.

இதற்கு முன்னதாக மாவு கல்லால் ஆன, கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும், தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது. இத்தொங்கணி மாவு கல்லினால் செய்யப்பட்டுள்ளது. இதனின் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது. இந்த சிறிய அணிகலன் 14.6 மி.மீட்டர் நீளமும், 4.2 மி.மீட்டர் சுற்றளவும் 30 மி.கிராம் எடை கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலனாகும்.

இதையும் படிங்க: வெம்பக்கோட்டை அகழ்வாய்வு; சுடு மண்ணாலான விதவிதமான கலைப் பொருட்கள் கண்டெடுப்பு!

மேலும் இந்த 3-ஆம் கட்ட அகழ்வாய்வில், இதற்கு முன்னதாக 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மனிதர்கள் பயன்படுத்திய சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால செங்கற்கள், சிகை அலங்காரத்துடன் பாவையின் தலைப்பகுதி, அலங்கரிக்கப்பட்ட சுடுமண் அகல்விளக்கு, சூடு மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணத்தின் அடிப்பகுதி, சதுரங்கம் விளையாடும் ஆட்டக்காய், சில்வட்டு, எலும்புகள் மற்றும் பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.

இதுவரை 1150-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் அகழ்வாய்வு பணியில் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக, தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளார். 1-ஆம் கட்ட அகழ்வாய்வில் 3,254 பொருட்களும், 2-ஆம் கட்ட அகழாய்வில் 4,660 பொருட்களும், குறிப்பாக தங்கம், சுடுமண் பொம்மைகள், பாசிமணிகள், சங்கு வளையல்கள் உள்ளிட்ட பலபொருட்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் 3000 ஆண்டு கால வரலாறு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.