ETV Bharat / state

"மதுரையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம்" - தமிழக பட்ஜெட்டில் மதுரைக்கான அறிவிப்புகள்! - Metro Rail Project for Madurai

Tamil Nadu Budget 2024: மதுரையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் துவங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Schemes for Madurai District announced in the Tamil Nadu Budget
தமிழக பட்ஜெட்டில் மதுரை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 10:43 PM IST

மதுரை: தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்று (பிப்.19) 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் மதுரை மாவட்டத்திற்கான திட்டங்கள் ஏராளமாக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மதுரையில் 26,500 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்க 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • மதுரை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் மூலம் சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடித் தொழில் வளாகம் ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இதன் மூலம் 4500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சுற்றுலாத்தல மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும்.
  • மதுரையில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைத்திடும் வகையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அதற்கான பணிகள் துவங்கப்படும்.
  • தங்கிப் பணி பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதிகள் மதுரை, சென்னை, கோவை ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் கட்ட 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் பேசப்பட்டும் சௌராஷ்டிரா மற்றும் பழங்குடியின மொழிகளை இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்த 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டிற்குள் கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களிலும், தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழ்ச் சமூகம் வாழ்ந்த 4 இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நவீன மரபணுவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தமிழ் மக்களின் மரபணுத் தொன்மை, இடப்பெயர்வு, வேளாண்மை, பண்பாட்டு நடைமுறைகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களைக் கண்டறிய மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொல் மரபணுவியல் ஆய்வகம் மூலம் தொல் மரபியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • வைகை, காவிரி, தாமிரபரணி மற்றும் நொய்யல் ஆகிய நதிகளை ஒட்டிய பகுதிகள் சீரமைக்கப்பட்டு நதிநீரைத் தூய்மையாகப் பராமரிக்கவும், நதிக்கரைகளில் பசுமைப் பூங்காக்கள் அமைக்கவும், திறந்தவெளி அரங்கம் அமைக்கவும் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை மேற்கொள்ள விரிவான ஆய்வுப் பணிகள் & திட்ட அறிக்கை தயாரிக்க 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க "நகர்ப்புற பசுமைத் திட்டம்" உருவாக்கப்படும்.
  • மதுரை மற்றும் சேலம் மாநகராட்சிகளில் 2024 - 2025 ஆம் நிதியாண்டில் 24 மணி நேரத் தடையற்ற குடிநீர் திட்டம்.
  • கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு உண்டு உறைவிட வசதிகளோடு 6 மாத பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
  • விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாகத் தமிழ்நாட்டை மாற்றிட மதுரை, சென்னை, திருச்சி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள்.
  • மதுரையில் புதிய கல்லூரி மாணவர் விடுதி அமைக்கப்படும்.
  • திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்த ரூ.26 கோடி ஒதுக்கீடு.
  • மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆவினில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தானியங்கி இயந்திரங்களைப் பொருத்திட 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் உள்ள வளாகத்தில் தமிழர்களின் பண்பாடு, தொன்மையான வரலாறு உள்ளிட்ட கலைகளை அரங்கேற்றம் செய்யும் வகையில் 20 கோடி ரூபாயில் புதிய வளாகம் அமைக்கப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.