ETV Bharat / state

அருந்ததியருக்கு 3% இட ஒதுக்கீடு தீர்ப்பு.. நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்! - SC Reservation - SC RESERVATION

CPIM K BALAKRISHNAN: அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் நீண்ட கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

CPIM K BALAKRISHNAN
CPIM K BALAKRISHNAN (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 10:42 AM IST

சென்னை: பட்டியலினத்தில் பின்தங்கி இருந்த அருந்ததியர் சமூகத்தினருக்கு, 2009ல் திமுக ஆட்சியில் வழங்கிய 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு, உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகச் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசியவர்,"உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அருந்ததிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களில் நடத்தியது. பட்டியலின மக்கள் சமூகத்திலேயே மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ள சமூகம் அருந்ததியர் சமூகம்.

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் நீண்ட கால போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அருந்ததிய மக்களுக்குக் கிடைத்த வரலாற்றுச் சாதனை. இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு ஏற்படுத்திய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரளாவில் வரலாறு காணாத சோகம் நடைபெற்றுள்ளது. எல்லா சக்திகளையும் திரட்டி வரலாறு காணாத சோகத்திலிருந்து கேரளா அரசு மீண்டு கொண்டு வருகிறது. தமிழக அரசு கேரள மக்களுக்குச் செய்து வரும் உதவிகளை நான் மனதார பாராட்டுகிறேன். நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்குத் தமிழக மீட்புப் படையினரை அனுப்பிய முதலமைச்சருக்கு நன்றி.

கேரளா நிலச்சரிவிற்கு முதற்கட்ட மீட்பு நிதியாக 10 லட்சம் ரூபாய் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுவது கேவலமான நாகரிகம் மற்ற பேச்சாக இருக்கிறது. பேரிடர் முன் எச்சரிக்கை அறிவித்தும் கேரளா அரசு செயல்படுத்தவில்லை என மத்திய அமைச்சர் கூறுவது ஒட்டுமொத்த பழியையும் கேரளா அரசு மீது சுமத்துவது போன்றது.

கேரளாவிற்கு தற்போது வரை அவர்கள் நிதி ஒதுக்கவில்லை. மழைக்காலங்களில் மண் சரிவு ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு எந்த ஒரு தொழில்நுட்பமும் இந்தியாவில் இல்லை, இதை மத்திய அரசு ஏற்படுத்தவில்லை.கேரளா அரசு மீது பழி சுமத்தும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். கேரளா நிலச்சரிவுக்கு மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து அதற்குத் தேவையான நிதியை வழங்க வேண்டும்" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: டன் கணக்கில் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை லவுட்டிச் சென்ற பணியாளர்கள்.. சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.