ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கிய பெரம்பலூர் நீதிமன்றம்! - Savukku Shankar in Perambalur Court

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:12 PM IST

Savukku Shankar: பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கி பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

பெரம்பலூர்: பெண் போலீசார் குறித்து அவதூறாக யூடியூப் சேனலில் பேசியதாக சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் செந்தமிழ்செல்வி என்பவர் கடந்த மே 6ஆம் தேதி அன்று புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் U/s 67 IT Act & 294(b), 353, 509 IPC r/w 4 of TNPWH Act 2002 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் ஆஜர் செய்வதற்காக சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீசார், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பர்வத்ராஜ் ஆறுமுகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் ஒரே பிரச்னைக்காக தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே நீதிமன்றக் காவலை நிராகரிக்க வேண்டுமென வாதிட்டனர். இதனை அடுத்து, நீதிபதி சவுக்கு சங்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் செலுத்தி சொந்த ஜாமீன் வழங்கியும், அழைக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து, சவுக்கு சங்கரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. யூடியூப் சேனலையும் மூட உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.