ETV Bharat / state

"ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தேசிய கொடியை ஏந்த காத்திருக்கிறேன்" - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் நம்பிக்கை - PARIS OLYMPIC 2024

PARIS OLYMPIC 2024 : பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசியக்கொடியை கையில் ஏந்தும் அந்த பொன்னான தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்று தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 7:55 PM IST

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்
டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை அண்ணா நகரில் கோ ஃபார் கோல்ட் (GO FOR GOLD) என்ற தலைப்பில் தனியார் அமைப்பானது, பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ள மூத்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசிய கொடியுடன் சரத் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சரத் கமல், "என்னுடைய ஐந்தாவது ஒலிம்பிக் தொடரை விளையாட உள்ளேன். டேபிள் டென்னிஸ் போட்டியில் குழுவாக விளையாடுவதில் முதன்முறையாக நமது அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கலப்பு மற்றும் தனி நபர் பிரிவில் விளையாடி இருக்கிறோம். இந்த முறை வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தொடக்க விழாவில் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்திச் செல்வது எனக்கு மட்டுமில்லாமல், உலக டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு பெருமை மிகுந்த தருணமாக இருக்கும். ஜூலை 26 ஆம் தேதி தேசியக் கொடியை கையில் பிடித்து நடக்கும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியை சரியாக செய்திருக்கிறேன். கடந்த நான்கு மாதங்களாக ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது போட்டியில் பங்கேற்கும் கடைசி கட்டத்தில் வந்திருக்கிறேன்.

அடுத்த 10 நாட்களில் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கிறேன். எங்கள் குழு சிறந்த பயிற்சி எடுத்துக் கொண்டு விளையாட காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் கண்டிப்பாக ஒரு பதக்கமாவது வெல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்கிறது. பதக்கத்தோடு வருவோம். மிக அருகில் சென்று இருக்கிறோம்.

நான் நான்கு வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். என்னுடைய பள்ளி எனக்கு முழு ஆதரவளித்ததால் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். எந்த வெற்றி வீரரை எடுத்துக் கொண்டாலும் பள்ளியின் ஆதரவு இல்லை என்றால் முன்னேறி இருக்க முடியாது.

விளையாட்டுக்கு பள்ளிகளில் அதிக ஆதரவு இருந்தால் சாதிக்க முடியும். நம்முடைய நாட்டில் திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். சிறுவயதில் இருந்தே முறையான பயிற்சி அளித்து வந்தால் கண்டிப்பாக சாதிக்க முடியும். இதனால் அதிக வெற்றியாளரை உருவாக்க முடியும்" என்று சரத் கமல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூன்றே நிமிடத்தில் முடிந்த மாநகராட்சி கூட்டம்.. திகைத்து போன நெல்லை கவுன்சிலர்கள்! - Tirunelveli Mayor resignation

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.