ETV Bharat / state

மலக்கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம்..மறந்து போன மனிதநேயம்! - sanitary workers cleaning drainage

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 11:06 PM IST

Sanitary Workers Cleaning Drainage:திருப்பத்தூர் பேருந்து நிலைய கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் அருகில் உள்ள கால்வாயில் கலக்கின்ற நிலையில், கால்வாய் நிரம்பியதால் அதனை எந்த வித இயந்திரமும் இல்லாமல் தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

மலக்கழிவுகளை அகற்றும் புகைப்படம்
மலக்கழிவுகளை அகற்றும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டண கழிப்பிடம் உள்ளது. அதனை தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவுகள் அருகில் இருக்கும் மூடப்படாத கால்வாயில் கலக்கப்படுகிறது.

இந்நிலையில், கால்வாய் நிரம்பி தேங்கி நிற்பதைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கழிப்பிடத்தை ஏலம் எடுத்த ஒப்பந்தகாரரிடம் சுட்டிக் காட்டி உள்ளனர். உடனடியாக அவர் எந்த வித இயந்திரமும் இன்றி 2 நபர்களை வைத்து மலக்கழிவுகளை வெட்ட வெளியில் அள்ளி போட சொன்ன சம்பவம் அப்பகுதியில் அரங்கேறி உள்ளது. வெட்ட வெளியில் மலக் கழிவுகளை அள்ளி போட்டதால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வாய்மை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கழிப்பறையில் இருந்து செப்டிக் டேங்க் கட்டி கழிவுகளை அதில் விடாமல் நேரடியாக கால்வாயில் விட்டு இருப்பதும், அதனை அள்ள இயந்திரங்கள் இருந்தும் அதனை பயன்படுத்தாமல் மலக்கழிவுகள் அகற்ற மனிதனைப் பயன்படுத்திய நிகழ்வு மனித நேயத்தை இழக்க செய்துள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "ஓட்டுக்கு காசு கொடுத்துவிட்டு கொள்கை கோட்பாட்டை பேசக்கூடாது" - சீமான் தாக்கு! - NTK SEEMAN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.