ETV Bharat / state

பணியாளர்கள் மீது விசாரணை நடத்த பெரியார் பல்கலை. தொழிற்சங்கம் கண்டனம்! - PERIYAR UNIVERSITY

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை நடத்த தொழிற்சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை, சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
அறிக்கை, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 19 hours ago

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 73 தொகுப்பூதியப் பணியாளர்கள் மீது விசாரணை நடத்த பல்கலை நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட குழு நடவடிக்கை எடுக்க கூடாது எனவும், இதுகுறித்து துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பல்கலைக்கழக தொழிற்சங்கம் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் தங்கவேல் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழக உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தலைமையிலான குழு விசாரணையின் முடிவில் அவரை குற்றவாளி என அறிவித்தது.

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமான கு.தங்கவேலை இரண்டு முறை பணியிடை நீக்கம் செய்ய துணைவேந்தருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை மதிக்காமல் துணைவேந்தர் அவரை பணி ஓய்வு பெறச் செய்தார். இது சட்டவிரோதமானது மற்றும் தமிழக அரசுக்கு எதிரானது. இதில் தமிழக அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 73 தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது சட்டவிரோதமாக விசாரணைக்கு துணைவேந்தர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் ஒலித்த அண்ணா பல்கலை., விவகாரம்: கவன ஈர்ப்புத் தீர்மானம்!

இது கண்டிக்கத்தக்கது. ஆட்சிக் குழு தீர்மானத்திற்கு எதிராக முன்னாள் பதிவாளர் தங்கவேலுவுக்கு பண பலன்களை வழங்கியுள்ளார் துணைவேந்தர். அவரது இந்த சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் துணைவேந்தர் பட்டியலினத்திற்கு எதிரான வன்கொடுமை வழக்கில் பிணை பெற்றதை ரத்து செய்ய முயற்சி எடுக்க வேண்டும்.

அவரை உடனடியாக கைது நடவடிக்கைக்கு, உட்படுத்த வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்தில் நடக்கும் அனைத்து விசாரணைக்கும் அண்ணா பல்கலையயை சேர்ந்த முட்டன் என்பவரை விசாரணை அலுவலராக நியமித்து தனக்கு வேண்டிய வகையில் மோசடியாக துணைவேந்தர் விசாரணை அறிக்கையினைப் பெற்று பல தொழிலாளர்களின் வாழ்வாதோரத்தோடு விளையாடி வருவதை சேலம் பெரியார் பல்கலைக் கழக தொழிற்சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. எனவே தமிழக அரசு துணைவேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.