ETV Bharat / state

10 ஆண்டுகள்.. 140 வாய்தாக்கள்.. அவமதிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன சமூக ஆர்வலர்..!

தகவல் ஆணையத்தில் அமர்ந்து பேசியதாக 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சமூக ஆர்வலர் இளங்கோவை விடுதலை செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சமூக ஆர்வலர் இளங்கோ மற்றும் பிறர்
சமூக ஆர்வலர் இளங்கோ மற்றும் பிறர் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது "நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை" என பத்திரிக்கைகளில் முழு பக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது என்றும், கடந்த 15 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக விளம்பரங்களுக்காக செலவு செய்தது எவ்வளவு? மக்களின் வரிப்பணம் எவ்வளவு அரசு பணம் செலவிடப்பட்டது? என சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் இளங்கோ தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மக்கள் தொடர்புத்துறையிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால், கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காததால் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு 2015ல் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த விசாரணை தலைமை செயலாளராக இருந்து ஓய்வுக்கு பின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட கே.எஸ் ஶ்ரீபதி மற்றும் நீதிபதியாக இருந்து ஓய்வுக்கு பின் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட எஸ்.எப் அக்பர் முன்பு 2015ம் ஆண்டு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அரசு அலுவலகங்களில் அமர்ந்து பேசுவது தவறில்லை என இருக்கையில் அமர்ந்து ஆணையரின் கேள்விக்கு இளங்கோ பதிலளித்துள்ளார். ஆனால், ஆணையத்தில் எழுந்து நின்று தான் பேச வேண்டும், அமர்ந்து பேச கூடாது என தலைமை தகவல் ஆணையர் தெரிவித்துள்ளார். அதற்கு, எழுந்து நின்று பதிலளிக்க முடியாது என இளங்கோ மறுப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அண்ணாமலை ஓடிப்போனவர்'.. கள்ள உறவில் திமுக - பாஜக... விளாசும் காயத்ரி ரகுராம்!

இதையடுத்து, ஆணையத்தை அவமதித்ததாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஆணையர் சார்பில் புகாரளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் இளங்கோ கைது செய்யப்பட்டு 3 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, ஆணையத்தின் தரப்பில் உரிய சாட்சிகளை வழக்கில் விசாரிக்கவில்லை. அறையில் இல்லாதவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆணையரை வழக்கிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அரசு செயல்படுவதாக இளங்கோ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், ஆணையம் மற்றும் ஆணையருக்கு ஆதரவாக செயல்படும் அரசை கண்டித்து "நாற்காலியில் அமரும் போராட்டம்" "நாற்காலியை தூக்கும் போராட்டம்" "சங்கு ஊதும் போராட்டம்""பாய் விரித்து தூங்கும் போராட்டம்" என பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 2015ம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளில் 140 வாய்தாக்கள் என நடைபெற்ற நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு சமூக ஆர்வலர் இளங்கோ மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என வழக்கை ரத்து செய்து அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்து சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.