ETV Bharat / state

கடலில் மூழ்கப்போகும் சென்னையின் எரியாக்கள்.. அதிர்ச்சி ரிப்போர்ட்! - chennai rising sea level

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 7:24 PM IST

கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதன் விளைவாக, வரும் 2040 இல் சென்னையின் மொத்த நிலப்பரப்பில் 7.29 சதவீதம் (86.6 சதுர கிலோமீட்டர்) கடலில் மூழ்கி காணாமல் போகக்கூடும் என்று ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

மெரினா பீச்
மெரினா பீச் (Image Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: கடல் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவது, இன்றைய நவீன காலகட்டத்தில், உலக அளவில் தீவிரமான பிரச்சனையாக இருந்து வருகிறது. பசுமை வாயுக்களின் தொடர் வெளியேற்றத்தால், புவி வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவாக கடல் நீரின் வெப்பமும் அதிகரித்து வருகிறது. கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதன் காரணமாக பனிப்பாறைகள் உருகி வழிந்து, இறுதியில் கடல் நீர்மட்டம் உயர்வதில் கொண்டு போய் விட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலின் விளைவாக, வரும் 2100 இல் உலக அளவில் கடல் நீர்மட்டம் 1.3 மீட்டர் முதல் 1.6 மீட்டர் அளவுவரை உயரக்கூடும் என்று பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பு (IPCC) மதி்ப்பிட்டுள்ளது. கடல் நீர்மட்டம் அதிகரிப்பது சர்வதேச அளவில் கடலோரம் அமைந்துள்ள நகரங்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்றும் IPCC ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இயற்கை துறைமுகங்கள், கலாசார மையங்கள், மத நினைவுச் சின்னங்கள் என பண்டைய காலந்தொட்டே நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிவரும் சென்னை உள்ளிட்ட கடலோர மாநகரங்கள், கடல் நீர்மட்டம் அதிகரிக்கப்பால் சந்திக்கவுள்ள எதிர்விளைவுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளுக்கான ஆய்வு மையம் (CSTEP) சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில், 'புவி வெப்பமயமாதலின் விளைவாக, சென்னையில் கடல் நீர்மட்டம் கடந்த 1987 முதல் 2016 ஆம் ஆண்டு வரை, மொத்தம் 0.679 செ.மீ. அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால், வரும் 2040 ஆம் ஆண்டில், சென்னையில் கடல் நீர்மட்டம் 17.4 சென்டிமீட்டர் அளவுக்கு உயரம் அபாயம் உள்ளது. இதன் விளைவாக, 86.6 சதுர கிலோமீட்டர் அளவிலான சென்னையின் நிலப்பரப்பு காணாமல் போகக்கூடும். அதாவது சென்னை மாநகரின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 7.29 சதவீதம் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது' என்று அந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தின் மொத்த நிலப்பரப்பில் 1- 5 சதவீதம் ( 6.96-7.43 சதுர கிலோமீட்டர்) அளவுக்கு 2040 இல் நீரில் மூழ்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி கொச்சி, மும்பை, மர்மகோவா உள்ளிட்ட 15 இந்திய கடலோர நகரங்களுக்கும் கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பேராபத்து காத்திருப்பதாக இந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

"கடல் நீர்மட்டம் உயர்வால், விசாகப்பட்டினத்தின் யாரடா மலைக்கு மறுபுறம் அமைந்துள்ள ஆர்.கே.கடற்கரை, குருசுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகத்தில் கடல் மண் அரிப்பு அதிகமாக இருக்கும்" என்று கடல்சார் ஆய்வுத் துறையின் ஒய்வுபெற்ற விஞ்ஞானி கே.எஸ்.ஆர்.மூர்த்தி தெரிவித்தார்

தென்னிந்தியாவின் குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்களில் ஒன்றான புதுச்சேரி கடற்கரையில், கடல் மண் அரிப்பை தடுக்கும் நோக்கில், கடற்கரையோரத்தில் ஆண்டுக்கு 3 லட்சம் கனஅடி மணல் மூட்டைகள் குவிக்கப்படுகின்றன. இதேபோன்று கொச்சியின் செல்லானம் கடற்கரை பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் விதத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முன்பே கணித்த இஸ்ரோ.. நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை.. வயநாடு நிலச்சரிவு உணர்த்துவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.