ETV Bharat / state

"வெறும் 60 ரூபா சாராயத்தால் அம்மா செத்துட்டா.. முகத்த பார்க்காம உடலை எடுக்கக்கூடாது" - கதறும் மகள்! - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த இந்திரா குப்பனின் மூத்த மகள் கோமதி என்பவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் வராமல் உடலை எடுக்கக் கூடாது என இந்திராவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயிரிழந்த இந்திராவின் உறவினர்கள்
உயிரிழந்த இந்திராவின் உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 9:48 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளசாராய விற்பனை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து வாந்தி, கண் எரிச்சல், வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இந்திராவின் உறவினர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையம், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு பிறகு அவர்களது வீடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே ஊரில் வெவ்வேறு தெருக்களைச் சார்ந்தவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒரே இடத்தில் தகனமும் நல்லடக்கமும் செய்தது. ஊர் முழுவதும் எங்கு திரும்பினாலும் உயிரிழந்தவர்களைப் பார்த்து உறவினர்கள் கதறிக் கொண்டிருக்கையில், உயிரிழந்த இந்திரா குப்பனின் (வயது 48) மூத்த மகள் கோமதி என்பவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் வராமல் உடலை எடுக்கக்கூடாது என இந்திராவின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து உயிரிழந்த இந்திராவின் உறவினர் கூறுகையில், "எங்க அம்மா நோய்வாய்பட்டு உயிரிழக்கவில்லை. வெறும் 60 ரூபாய் பாக்கெட் சாராயத்தால் உயிரிழந்தார். நான் வராமல் தகனம் பண்ணக்கூடாது, தாயின் முகத்தை பார்க்க வேண்டும் என்று இந்திராவின் மூத்த மகள் கோமதி கூறியுள்ளார்.

அதனால் அவர் வராமல் இந்திராவின் உடலை எடுக்க கூடாது. நாங்கள் உடலை எடுக்க விடமாட்டோம். தவறிழைத்த போலீசாரை தற்காலிகமாக தான் பணிநீக்கம் செய்துள்ளனர். அரசாங்கம் கொடுக்கும் பணம் வாழ்க்கைக்கு போதுமா?. உயிரிழந்த இந்திராவின் மூத்த மகள் கோமதி வெளிநாட்டில் இருந்து வராமல் எடுக்கக் கூடாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சிக்கு விரைந்த விஜய்... பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்! - vijay in kallakurichi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.