ETV Bharat / state

ஈஷாவில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் - சீறிப்பாய்ந்த காளைகள்! - Isha yoga center Rekla Race

Isha rekla race: தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றிக் கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா, கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. நிறைவு நாளான இன்று தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டியான ரேக்ளா பந்தயம் இன்று நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 9:37 PM IST

கோயம்புத்தூர்: தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை போற்றி கொண்டாடும் ‘தமிழ் தெம்பு’ என்னும் 9 நாள் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 9ஆம் தேதி துவங்கி நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (மார்ச் 17) தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக திகழும் மாட்டு வண்டிப் போட்டி (ரேக்ளா பந்தயம்) நடத்தப்பட்டது. ஈஷாவில் முதல்முறையாக நடந்த ரேக்ளா போட்டியில், சுமார் 400க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதற்காக, கோவை மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் நேற்று இரவே ஈஷாவிற்கு வருகை தந்தனர். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல்கட்டமாக 200 மீட்டர் பந்தயப் போட்டி நடைபெற்றது. துவக்க இடத்தில் கொடி அசைத்த உடன் 2 நாட்டு மாடுகளுடன் கூடிய ரேக்ளா வண்டி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. ஒரு வண்டி பந்தய கோட்டை அடைந்த பின்னர், அடுத்த வண்டி அனுமதிக்கப்பட்டது.

ஒவ்வொரு நாட்டு மாடுகளும் காண்போரை அசர வைக்கும் வகையில் எல்லை கோட்டை நோக்கி சீறிப் பாய்ந்தன. 200 மீட்டர் போட்டி நிறைவு பெற்ற பின்னர், 300 மீட்டர் போட்டி நடத்தப்பட்டது. இவ்விழாவை ஏராளமான பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.

இரண்டு பிரிவிலும், முதல் இடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. 2-ம் பரிசாக ரூ.50,000, 3-ம் பரிசாக ரூ.25,000, 4-ம் பரிசாக ரூ.15,000 வழங்கப்பட்டது. இதுதவிர 5 முதல் 15 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3,000, 16 முதல் 30 வரையிலான இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது.. எச்சரிக்கை விடுத்த தூத்துக்குடி எஸ்.பி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.