ETV Bharat / state

திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணி என்ன? களம் காணும் வேட்பாளர் யார்? - Tirunelveli Constituency

Tirunelveli Constituency: திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடத் தலைமை வாய்ப்பளித்தாள் போட்டியிடத் தாயார் என்று நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tirunelveli Constituency
Tirunelveli Constituency
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 18, 2024, 4:04 PM IST

திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் பணிகளில் இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதே போல், அரசியல் கட்சியினரும் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தலுக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Nanguneri Assembly Member Ruby R Manoharan
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் (தனித் தொகுதி) மற்றும் திருநெல்வேலி உள்பட காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன இங்கு பாஜக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் தற்போதைய திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடப் போவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வலுவான வேட்பாளர்கள்: சமீபத்தில் பாஜகவில் தனது கட்சியை இணைத்துக் கொண்ட நடிகர் சரத்குமார் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரும் நெல்லை தொகுதியில் களமிறங்க வாய்ப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருநெல்வேலியில் பாஜகவுக்கு எதிராக வலுமையான வேட்பாளர்களைக் களம் இறக்க திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே இந்த முறை அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக சார்பில் வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்குவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக உட்கட்சி பூசல்: அதேசமயம் திமுகவில் தற்போதைய சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தனது மகன் அலெக்ஸ் அப்பாவுக்கு எம்.பி சீட்டு கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதேபோல வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல தனியார் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் திமுகவின் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான கிரகாம்பெல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே திருநெல்வேலி மாவட்ட திமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், திருநெல்வேலி தொகுதியை திமுகவிற்கு வழங்கினால் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி பாதிக்கப்படும் என்பதால் தற்போது திருநெல்வேலி தொகுதியை காங்கிரசுக்கு திமுக தலைமை ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

ரூபி மனோகரன்: காங்கிரஸ் சார்பில் திருநெல்வேலியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் சார்பில் தற்போதைய சிறுபான்மையினர் நல வாரிய தலைவரான பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனும் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். இதுமட்டும் அல்லாது, ரூபி மனோகரன் மாவட்டத்தில் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக இருந்து வருகிறார். ஆகவே, ரூபி மனோகரனுக்கே காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து அறிந்து கொள்வதற்காக ஈடிவி பாரத் சார்பில் ரூபி மனோகரனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது பதிலளித்த அவர், "திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டது உண்மைதான் என்றும், போட்டியிடத் தலைமை வாய்ப்பளித்தாள், தான் போட்டியிடத் தாயார்" என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.. அடுத்த திட்டம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.