இராமநாதபுரம்: இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதலைமைச்சர் ஓபிஎஸ்ஸை விட 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணையதள விவரம்..
வ.எண் | வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | நவாஸ் கனி | இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் | 5,09,664 |
2 | ஓ.பன்னீர் செல்வம் | சுயேச்சை | 3,42,882 |
3 | ஜெய பெருமாள் | அதிமுக | 99,780 |
4 | சந்திர பிரபா பெருமாள் | நாதக | 97,672 |
இராமநாதபுரம் தொகுதியில், மதியம் 12:15 மணி நிலவரப்படி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 94,427 வாக்குகளுடன் முன்னிலை உள்ளார். சுயேச்சையாக களமிறங்கி உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 53,167 வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஜெயப்பெருமாள் 21,421 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சந்திரா பிரபா ஜெயபால் 16,903 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இராமநாதபுரம் தொகுதியில், காலை 10.30 மணி நிலவரப்படி, இந்தியன் யூனின் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 11,155 வாக்குகளுடன் முன்னிலை உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 5,693 வாக்குகளை பெற்றுள்ளார்.
களத்தில் 6 ஓபிஎஸ்கள்: இத்தொகுதியில் கடந்த முறை இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் வெற்றிப் பெற்றதால், இந்த முறையும் திமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதி அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஏணி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியின் ஆதரவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரிலேயே மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2019 தேர்தலின்போது, இரமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 15,57,910 ஆக இருந்தது. இதில் ஆண் வாக்காளர்கள் 7,75,765, பெண் வாக்காளர்கள் 7,82,063, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 82 பேர். இவற்றில் மொத்தம் பதிவான வாக்குகளில் நவாஸ் கனி 4,69,943 வாக்குகளை அள்ளினார். இவருக்கு அடுத்ததாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 3,42,821 வாக்குகளை பெற்றார். 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நவாஸ் கனி வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் வி.டி.என். ஆனந்த் 1,41,806 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் புவனேஸ்வரி 46 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளையும் பெற்றனர்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: ஓபிஎஸ் Vs நவாஸ் கனி; இராமநாதபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நவாஸ் கனி முன்னிலை! - Lok Sabha Election Results 2024