ETV Bharat / state

“கருணாநிதி கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர் துரைமுருகன்”.. ’கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு! - Rajinikanth about Duraimurugan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 10:41 PM IST

Updated : Aug 24, 2024, 11:01 PM IST

MK Stalin about Rajinikanth: வயதில் மூத்தவர் என்ற முறையில் நீங்கள் சொன்னதை நான் ஏற்கிறேன் என ரஜினிகாந்தின் அரசியல் களம் குறித்து பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, இவ்விழாவில் உரையாற்றிய ரஜினிகாந்த், “சமீபத்தில் அரசியலுக்கு நுழைந்து தன் கடின உழைப்பால் மக்கள் மத்தியில் அன்பைப் பெற்று, அரசியலில் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அறிவாளிகள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பதே அறிவாளித்தனம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை திமுகவினர் கொண்டாடியது போல், எந்த அரசியல் தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க முடியாது.

கருணாநிதியுடன் இருந்த மூத்த அமைச்சர்களை சமாளிப்பது கடினம். துரைமுருகன் போன்றோர் கருணாநிதியின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது, ஸ்டாலின் சார் ஹேட்ஸ் ஆஃப் யூ” என்ற பேச்சால் கலகலப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “கலைஞர் நினைவிடம் தாஜ்மஹால் மாதிரி கட்டியுள்ளனர். அதேபோல், திருவாரூரில் கலைஞரின் கோட்டம் மிக சிறப்பாக கட்டியுள்ளனர். இந்த பணிகளை மேற்கொண்ட எ.வ.வேலு புத்தகத்தையும் மிக அருமையாக எழுதியுள்ளார். புத்தகங்களின் விலையைக் குறைத்து வைத்தால் எல்லோரும் வாங்கி படிப்பார்கள்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து அரை மணி நேரம் பேசினார் என்றால், அவராக பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும். விமர்சனங்களை கருணாநிதி எப்படி எடுத்துக்கொள்வார் என்றால், அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பார்.

தரம் குறைந்தவர் எழுதினால் அதனை கண்டுகொள்ள மாட்டார். அறிவார்ந்தவர்கள் எழுதினால் ஆராய்வார், விளக்கிக் கூறுவார். விமர்சனம் செய்யுங்கள் யாரையும் நோகடிக்காதீர்கள். இப்போது இருப்பவர்கள் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை. ஆனால், கருணாநிதி பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே மகிழ்வார். கருணாநிதிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திப்பது யானைக்கு கரும்பு கிடைத்தது போன்றது.

ராஜ்நாத் சிங் குறித்து ரஜினிகாந்த் பேச்சு (Credits - ETV Bharat Tamil Nadu)

முரசொலி மாறன் மருத்துவமனையில் அனுமதித்த போது மற்றும் வீரப்பன், கன்னட நடிகத் ராஜ்குமார் கடத்திய நேரத்தில் மட்டும் தான் கருணாநிதி சோகமாக இருந்ததைப் பார்த்தேன். லஞ்சத்தை மையப்படுத்தி எடுத்த சிவாஜி படத்தை பார்த்து நல்லது செய்ய வேண்டும் என பெருமூச்சு விட்டார். அந்த பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த படத்தின் வெற்றி விழாவிற்கு நான் வருவேன் என தைரியமாகக் கூறி வந்து வாழ்த்தியவர் கருணாநிதி” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலைஞர் என்பவர் எனக்கு தந்தையாக மட்டுமல்ல, தயாகவும் வாழ்ந்தார். எனக்கு மட்டுமல்ல அமைச்சர்கள், தொண்டர்கள் என அனைவருக்கும் தயாக வாழ்ந்தவர். கருணாநிதி, தாய் அஞ்சுகம் அம்மாள் குறித்து உருக்கமாக எழுதுவார்.

எ.வ.வேலு மகன் திருமணத்தின் போது, ஒரு ரூபாய்க்கு அரிசி திட்டத்தை செயல்படுத்தியதற்கு, அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவை பாராட்டினார். வேலுவைப் போன்று அனைத்து அமைச்சர்களும் செயல்பட்டால் நல்லது என பாராட்டியவர் கருணாநிதி.

கருணாநிதி மனதில் நினைப்பதை அறிந்து செயல்படுத்தியவர் எ.வ.வேலு, இன்று எனக்கும் அதுபோன்று தான் உள்ளார். கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல், நடிகர் ரஜினிகாந்த் கூறியது போல் கலைஞர் நினைவகம் என அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்தவர் எ.வ.வேலு. திமுகவிலும் அவர் பல பணிகளை சிறப்பாக செய்துள்ளார்.

இந்த புத்தகத்தில் மிசா காட்சிகளை விவரிக்கப்பட்ட போது, நான் தாக்கப்பட்ட காட்சிகளும் இந்த புத்தகத்தில் வருகிறது. மிசாவில் கைது செய்யப்பட்ட திமுகவினரைச் சந்திக்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறைக்கு கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார்.

உங்கள் மகனை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம் என பதில் வருகிறது. கைது செய்யப்பட்ட அனைத்து திமுகவினரும் அவர்களது குடும்பத்தினரைப் பார்த்த பின் இறுதியாகத்தான் என் மகனை பார்ப்பேன் எனக் கூறி என்னை இறுதியாகச் சந்தித்தார் கருணாநிதி. திருக்குவளையில் பிறந்த கருணாநிதிக்கு இன்று இந்திய அரசே நாணயம் வெளியிடுவது பெருமை.

என்னை இந்த நிகழ்ச்சிக்கு வந்து என்னை ஊக்கப்படுத்திய நண்பர் ரஜினிகாந்த், என்னை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் எனக்கு அறிவுரை கூறிய நீங்கள் சொன்னதை நான் புரிந்துகொண்டேன். பயப்பட வேண்டாம், என்றும் நான் தவறிவிட மாட்டேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்று” எனப் பேசினார்.

இதையும் படிங்க: ‘தமிழ் வெல்லும்’.. “இதுவும் கலைஞரின் சாதனை தான்" - நாணய வெளியீட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Last Updated : Aug 24, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.