சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. எனவே, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
பூண்டி, சோழவரம், செங்குன்றம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து சென்னை முழுவதும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. எனவே இந்த ஏரிகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதே போல சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. வீராணம் ஏரி மொத்த கொள்ளளவு 15.60 அடியாகும். இதில் நேற்று வரை 13.40 அடியாக இருந்தது. இன்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர் இருப்பு 13.75 அடியாக உள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் நேற்றைய நீர் இருப்பு நிலவரத்துடன் இன்றைய நிலவரம் இரண்டும் ஓப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏரியின் பெயர் | மொத்த நீர் கொள்ளளவு(அடி) | 14ஆம் தேதி நிலவரம் நீர்மட்டம் (அடி) | இன்றைய நிலவரம் நீர்மட்டம் (அடி) |
பூண்டி | 35.00 | 20.47 | 20.80 |
சோழவரம் | 18.86 | 0.23 | 0.77 |
செங்குன்றம் | 21.20 | 14.97 | 15.00 |
கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை | 36.61 | 30.19 | 30.26 |
செம்பரம்பாக்கம் | 24.00 | 13.16 | 13.23 |
மொத்தம் | 79.02 | 80.06 |