ETV Bharat / state

ஃபெஞ்சல் புயல்: சாலையில் தேங்கிய மழைநீர்; பணியில் மாநகராட்சி ஊழியர்கள்! - CYCLONE FENGAL

ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் நிலையில், தாம்பரம் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து, தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகர ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள்
தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 11:18 AM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் (Cyclone Fengal) இன்று (நவ.30) சனிக்கிழமை நண்பகல் மாமல்லபுரம் - காரைக்காலுக்கு இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புயல் கரையை கடக்கும் சமயத்தில் தரைக்காற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் தேங்கிய பகுதி
மழை நீர் தேங்கிய பகுதி (ETV Bharat Tamil Nadu)

புயல் காரணமாக நேற்று மாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், சிட்லபாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி முதல் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது.

மழை நீர் அகற்றும் பணியில் ஊழியர்கள்:

மழை நீர் தேங்கிய இடத்தில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
மழை நீர் தேங்கிய இடத்தில் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

மழை நீர் தேங்கும் இடங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக தீங்கும் மழை நீரை, அப்புறப்படுத்த தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில், மழைநீர் தேங்கும் பகுதிகளில் மின் மோட்டார்களை வைத்து மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்பு? - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தற்போது வரை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்து தரும் நிலையில், புயல் கரையை நெருங்கும் பட்சத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அதிக கன மழை பெய்யக்கூடும் என்பதால், மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியை நெருங்கிய ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்து வருவதால், புயல் கரையைக் கடக்கும் நேரம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை தொடர்பான மீட்புப் பணிகளை ஆராயும் விதமாக, பேரிடர் மேலாண்மை குழுவின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டார்.

திருப்போரூரைச் சூழந்த மழை வெள்ளம்

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர், கேளம்பாக்கம், படூர், நாவலூர், மற்றும் கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம், முட்டுக்காடு, கோவளம், செம்மஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான முதல் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது.

ஈசிஆர் சாலையில் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்
ஈசிஆர் சாலையில் சூழ்ந்துள்ள மழை வெள்ளம் (ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தரை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் உருவாகி வருகிறது. மேலும், மாலை புயல் கரையை கடக்கும் சூழலில் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ எம் ஆர் சாலையில் பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஃபெஞ்சல் புயல்: கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரடி விசிட்; களநிலவரங்கள் குறித்து ஸ்டாலின் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.