ETV Bharat / state

பிரதமர் மோடி பதவியேற்பு விழா; தமிழக ரயில்வே பெண் லோகோ பைலட்க்கு அழைப்பு! - woman loco pilot invited PM Modi inauguration

Woman loco pilot invited PM Modi inauguration ceremony: பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தமிழக ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, லோகோ பைலட் ஐஸ்வர்யா புகைப்படம்
பிரதமர் மோடி, லோகோ பைலட் ஐஸ்வர்யா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 9:57 PM IST

மதுரை: இந்திய நாடாளுமன்றத்தின் 18வது பொதுத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மோடி தலைமையில் புதிய அமைச்சரவை வருகின்ற ஜூன் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பதவி ஏற்க உள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ள, சென்னை கோட்ட ரயில்வே பெண் லோகோ பைலட் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா இதுவரை இரண்டு லட்சம் மணி நேரங்கள் வந்தே பாரத், ஜன சதாப்தி போன்ற முன்னணி ரயில்களை இயக்கி உள்ளார். ரயில்வே சமிக்ஞைகளை (சிக்னல்) உடனடியாக உள்வாங்கும் இவரது திறமை ரயில்வே அதிகாரிகளால் பாராட்டப்பட்டுள்ளது. சென்னை - விஜயவாடா, சென்னை - கோயம்புத்தூர் பிரிவில் துவக்க நாள் முதலே ஐஸ்வர்யா மேனன் வந்தே பாரத் ரயில்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதிய பிரதமரின் பதவியேற்பு விழாவுக்கு ஐஸ்வர்யா மேனன் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளது தெற்கு ரயில்வேக்கு கிடைத்த பெருமிதம் என்று அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தேச நலனே முதன்மையானது.. தமிழக மக்களுக்கு நன்றி.. என்டிஏ கூட்டத்தில் பிரதமர் பேசியது என்ன? - Nda Government Formation Update

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.