ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை! - Advise to vote counting staffs

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 4:14 PM IST

J Radhakrishnan: வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பதட்டம் அடையாமல் நிதானமாக செயல்பட வேண்டும் என சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் புகைப்படம்
ராதாகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: திட்டமிட்டபடி அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும், வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கி வருவதாகவும் இன்று (மே 29) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், 7ஆம் கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கையை முறையாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியவுள்ள வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு சென்னை ரிப்பன் மாளிகை கட்டடத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் முதற்கட்ட பயிற்சியானது வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் செயல்பட வேண்டும் எனவும்ம் எந்தவித தவறுகளும் ஏற்படமால் வாக்குகளை எண்ண வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு தங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மேசைகளில் அமர்ந்து நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராதாகிருஷ்ணன், “திட்டமிட்டபடி தேர்தல் ஆணையரின் அறிவுரையோடு வாக்கு எண்ணிக்கைக்கான முதற்கட்ட பயிற்சியானது பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.

ஜூன் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. சில நேரங்களில் ஊடங்களில் முன்கூட்டியே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன, அவற்றை தவிர்க்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள பணியாளர்களுக்கு எளிமையான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்கி வருகிறார்கள். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் வழங்கப்படும்” என கூறியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் எனவும், ஆனால் தபால் வாக்குகளின் முடிவுகள் இறுதியில் தான் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: மத்திய சென்னையை தக்கவைக்குமா திமுக? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION RESULT 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.