ETV Bharat / state

அதிமுகவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த புரட்சி பாரதம் கட்சியினர்...விழுப்புரத்தில் நடந்தது என்ன? - pbk katchi protest against aiadmk

Aiadmk Seat sharing: அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்படாத கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருமணநல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

pbk katchi protest against aiadmk
pbk katchi protest against aiadmk
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 7:38 AM IST

Updated : Mar 21, 2024, 8:20 AM IST

விழுப்புரம்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு விழுப்புரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என பேசப்பட்டது.

இந்த நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு தற்போது வரை அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த புரட்சி பாரதம் கட்சி தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாததைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள பெரிய சவலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியினர் ஒன்று கூடி அதிமுகவுக்கு எதிராகவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில் அதிமுகவுக்கு எதிராகப் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் ஏன்?: 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (புதன்கிழமை) முதல் தொடங்கியது.

இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வரும் அதிமுக 16 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அப்போது மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கீடு செய்த பின் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் அங்க வகிக்கக்கூடிய தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது.

அதன்படி தேமுதிகவிற்குத் திருவள்ளூர்(தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே போல் புதிய தமிழகம் கட்சிக்குத் தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்குத் திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தங்கள் கட்சிக்கு (புரட்சி பாரதம்) சீட் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி அக்கட்சி சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக.. யார் யார் எந்தெந்த தொகுதியில் போட்டி?

Last Updated : Mar 21, 2024, 8:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.