ETV Bharat / state

“மதம் என பிரிந்தது போதும்..” பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு நாகத்தம்மாள் கோயிலில் இருந்து சீர்வரிசை! - PUDUKOTTAI PEOPLE SEER FOR MOSQUE

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பொதுமக்கள் இணைந்து 30க்கும் மேற்பட்ட சீர் தட்டுகளை தூக்கி ஊர்வலமாக சென்று சீர் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவசலுக்கு சீர் வரிசை செய்த மக்கள்
புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவசலுக்கு சீர் வரிசை செய்த மக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 3:32 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு, பெரியார் நகர், நரிமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று (நவம்பர்.22) வெள்ளிகிழமை நடைபெற்றது. இந்த விழாவானது மாமன்ற உறுப்பினர் பழனிவேலின் தலைமையில் நடைபெற்ற நிலையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் சிறப்பாக நரிமேடு நாகம்மாள் கோயிலில் இருந்து பழங்கள், பிஸ்கட், சாக்லேட், மரக்கன்றுகள் என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகள், இஸ்லாமியர்கள் படிக்கும் குரான் நூல், பள்ளிவாசல் அஜரத்திற்கு புத்தாடைகள் கொண்ட தட்டுகளை சீர்வரிசையாக கொடுத்தனர். இந்த சீர்வரிசை தட்டுக்களை புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், திமுக நகரக் கழகச் செயலாளர் செந்தில் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒன்று இணைந்து ஊர்வலமாக சென்று, புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு எடுத்துச் சென்றனர்.

வருகை தந்தவர்களுக்கு வழக்கப்பட்ட பிரியாணி
வருகை தந்தவர்களுக்கு வழக்கப்பட்ட பிரியாணி (Credits- ETV Bharat Tamil Nadu)

அங்கு அவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்று சீர்வரிசை தட்டுகளை வாங்கிச் சிறப்பு தொழுகையில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் பொது மக்கள் சார்பில் பள்ளிவாசல் அஜரதிற்கும், நிர்வாகிகளுக்கும் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

அதிகாரிகள் மற்றும் அஜரத் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "தவெக-வில் பெண்கள் முதன்மையானவர்கள்"- தஞ்சை பொறுப்பாளர் விஜய் சரவணன்!

அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்களுக்கு இந்த நிகழ்வால் பெரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்காக வருகை தந்த 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பள்ளிவாசல் சார்ப்பாக பிரியாணி உணவு சமைத்து வழங்கப்பட்டது.

பள்ளிவாசல் அஜரத்திற்கு வழக்கப்பட்ட பரிசுக்கள்
பள்ளிவாசல் அஜரத்திற்கு வழக்கப்பட்ட பரிசுக்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

இது குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் பழனிவேல் கூறுகையில், “எங்கள் பகுதி மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் பகுதி. இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவிற்காக அனைவரும் ஒன்று சேர்ந்து சீர்வரிசை தட்டுகளை எடுத்துச் வந்தோம். எங்க குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.