ETV Bharat / state

4 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. புதுக்கோட்டை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு! - Pudukottai Mahila court - PUDUKOTTAI MAHILA COURT

Pocso case judgement: புதுக்கோட்டையைச் சேர்ந்த 63 வயது முதியவர், 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் புகைப்படம்
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் புகைப்படம் (Credit to Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 8:18 PM IST

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான முதியவர், கடந்த 2023ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி அன்று, அதே பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி ஜெயந்தி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் பெண் வெட்டிக்கொலை.. எண்ணூரை உலுக்கிய சம்பவம்! - Chennai Woman Murder

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.