ETV Bharat / state

மனைவியின் சடலம் கணவர் வீட்டு முன் எரிப்பு.. புதுக்கோட்டையை பரபரப்பாக்கிய சம்பவம்! - Pudukkottai - PUDUKKOTTAI

Alangudi Women Suicide issue: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலை, அவருடன் இருந்து பிரிந்து சென்ற கணவன் வீட்டு முன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் வீட்டு முன் எரிக்கப்பட்ட மனைவியின் சடலம், புவனேஸ்வரி
கணவன் வீட்டு முன் எரிக்கப்பட்ட மனைவியின் சடலம், புவனேஸ்வரி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 7:14 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. அதே ஊரைச் சேர்ந்த அவரது அத்தை மகனான பழனிராஜனுடன், புவனேஸ்வரிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணம் நடந்து ஓராண்டுக்குள் புவனேஸ்வரியை விட்டுச் சென்ற பழனிராஜ், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த புவனேஸ்வரி தனது தந்தை வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு புவனேஸ்வரியின் உடலை பழனிராஜின் வீட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பழனி ராஜின் தாய், தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட யாரும் அங்கு இல்லாததால், புவனேஸ்வரி இறப்பினால் அவர்கள் தலைமறைவு ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், புவனேஸ்வரி உறவினர்களை சமரச பேச்சுவார்த்தை நடத்தியதுடன், புவனேஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருந்தனர். மேலும், பொன்னன்விடுதி கிராமத்தில் எந்த ஒரு அசம்பாவித நிகழ்வும் நிகழாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை முடிந்து இன்று மாலை புவனேஸ்வரியின் உடலை ஊருக்கு கொண்டு வந்ததையடுத்து, புவனேஸ்வரியின் உடலை அவரது கணவர் பழனிராஜின் வீட்டு முன்பு வைத்து தீயிட்டு எரித்ததாக தெரிகிறது. நேற்று இரவு முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குவிக்கப்பட்ட போலீசார் இருந்தும் எப்படி புவனேஸ்வரியின் உறவினர்கள் பழனிராஜன் வீட்டு முன்பு இறுதிக் காரியங்கள் செய்து, அவரது உடலை எரித்ததாக கூறப்படும் நிகழ்வு நடந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மனைவியை விட்டுச் சென்ற பழனிராஜை போலீசார் கைது செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இதுகுறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்.. நெஞ்சை பிசையும் சோகம்.. ராணிப்பேட்டையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.