ETV Bharat / state

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரம்; வதந்தி பரப்புவதாகக் கிராம மக்கள் மனு! - Pudukottai collector office - PUDUKOTTAI COLLECTOR OFFICE

Dung in water tank: புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரம் மூலமாக எங்களது கிராமத்தில் உள்ள இரண்டு சமூக மக்களுக்கு இடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கில் வதந்தியைப் பரப்பி வருகின்றனர் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 5:48 PM IST

புதுக்கோட்டை குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்த விவகாரம்; வதந்தி பரப்புவதாகக் கிராம மக்கள் மனு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, சங்கம்விடுதி பஞ்சாயத்துக்குட்பட்ட குருவாண்டான் தெருவில் இரண்டு சமூகத்து மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்ததாகப் புகார் வந்தது. இதனையடுத்து அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள நீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினர்.

இந்த நிலையில் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூக மக்களும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் "இரண்டு சமூகத்து மக்களும் ஊரில் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். எங்களது ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காக ஒரு சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர்.

நீர் மாதிரி எடுக்கப்பட்ட நிலையில் பரிசோதனை முடிவு வந்தவுடன் சாணம் கலந்திருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்களுக்கு இளையராஜா என்பவர் மீது சந்தேகம் உள்ளது. அவரை காவல்துறையினர் விசாரணை செய்ய வேண்டும். அரசியல்வாதிகள் தான் எங்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகின்றனர்.

என்ன நடந்தது, என்று தெரியாமல் இந்த விஷயத்தை பெரியதாக்குகின்றனர். இரண்டு சமூகத்து மக்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். அங்குள்ள கோயிலில் இரு தரப்பினரும் வழிபடுகிறோம். ஆனால் வேண்டுமென்று ஒரு சிலர் எங்களுக்குப் பிரிவினையை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், "அரசியல் கட்சித் தலைவர்கள் தான் எங்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நீரை இரு தரப்பினரும் தான் பயன்படுத்துகிறோம்.

இளையராஜா என்பவர் தான் சாணம் கலந்துள்ளதாக முதல் முதலில் தெரிவித்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது முடிவு ஏதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

இதற்கிடையில் மண்டல பொதுச் சுகாதார நீர் பகுப்பு ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், "குடிநீர் மாதிரியானது குடிப்பதற்கு உகந்தது என்றும், நோய்க்கிருமி தொற்றுகள் ஏதும் இல்லை" என்றும் திருச்சி, நீர் பகுப்பு ஆய்வகம், மண்டல பொதுச் சுகாதார தலைமை நீர் பகுப்பு ஆய்வாளர் தமிழக அரசிடம் நேற்று (ஏப்.30) அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 36வது முறையாக நீட்டிப்பு! - EX Minister Senthil Balaji Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.