ETV Bharat / state

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் ஏன்? - சந்தேகம் கிளப்பும் கிருஷ்ணசாமி! - Manjolai Tea estate workers

Manjolai Tea estate workers: தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், தனிப்பட்ட முதலாளிகளுக்கு பயன்படுவதற்காகவே மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பறிக்கப்படுகிறது எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேறினால் புதிய தமிழகம் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி , மாஞ்சோலை கோப்புபடம்
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி , மாஞ்சோலை கோப்புபடம் (CREDIT -ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 5:49 PM IST

சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை வெளியேற்றுவது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டாயப்படுத்தி வெளியேற்ற செய்கிறார்கள். மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் களக்காடு, முண்டந்துறை வனப்பகுதியில் 8,373 ஏக்கர் பரப்பளவில் இருந்து வருகின்றன. சட்டப்படியாக 2028 ஆம் ஆண்டு தான் குத்தகை காலம் நிறைவடைகிறது. ஆனால் இப்போதே தொழிலாளர்களை வெளியேற்றுவதன் அவசியம் என்ன? மாஞ்சோலையில் இயற்கை உரங்களின் மூலம் தேயிலை உற்பத்தியாகி வருகிறது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த தேயிலை உற்பத்தி தளமாக மாஞ்சோலை விளங்குகிறது. அங்கு பணிபுரிபவர்கள் கொத்தடிமைகளாக நடத்தபடுத்துகிறர்கள். நாளொன்றுக்கு 490 ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்கள். பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (BBTC) நிறுவனம் 45 நாட்களுக்குள் அங்குள்ளவர்களை கட்டாயமாக வெளியேற்ற கையெழுத்து பெற்றுள்ளார்கள்.

மாஞ்சோலை தொடர்பாக முதலமைச்சரின் தனி செயலாளருக்கு கடிதம் எழுதியும் இன்றுவரை பதில் இல்லை, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை நீக்கி அவர்களை வெளியேற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு அந்த இடத்தை யாரிடம் ஒப்படைக்க போகிறீர்கள்?

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை சந்தேகத்திற்கு உள்ளாக்கிறது. தனிப்பட்ட முதலாளிகளுக்கு பயன்படுவதற்காகவே மாஞ்சோலை தேயிலை தோட்டம் பறிக்கப்படுகிறது.தேயிலை தொழிலாளர்களை வெளியேற்றுவது அரசின் முடிவா? தமிழ்நாடு அரசு வேறு பயன்களுக்காக உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. தேயிலை தோட்ட விவகாரத்தில் அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தேயிலை தோட்ட தொழிலாளர்களை சந்திக்க காவல் துறை அனுமதி வழங்காதது ஏன்?. மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசே ஏற்று வழி நடத்த வேண்டும். மாஞ்சோலையில் போராட வேண்டிய சூழல் இதுவரை நிலவவில்லை, ஒருவேளை மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேறினால் போராட்டம் நடத்தப்படும்” என்று கிருஷ்ணசாமி கூறினார்.

இதையும் படிங்க: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு - Manjolai Tea estate workers

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.