ETV Bharat / state

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தி வலுக்கும் போராட்டம்!

Madurai Kamaraj University: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே மேற்கொள்வதுடன், அதனை அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

Protest to make Madurai Kamaraj University as Government owned
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கக் கோரி போராட்டம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 2:58 PM IST

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

மதுரை: நிதி நெருக்கடி மிகுந்துள்ள தற்போதைய சூழலில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தைத் தமிழக அரசே மேற்கொள்வதுடன், அதனை உடனடியாக அரசுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பல்கலைக்கழகப் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாக ஊதியம், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படாத நிலையில், கடந்த 5 நாட்களாகப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பதிவாளர் முனைவர் முத்தையா ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடந்த 5 நாட்களாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கூட்டமைப்புக் குழுவின் சார்பாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களாகவே ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

துணைவேந்தர் குமார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய அரசாணையைப் பிறப்பித்து எங்களது வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.

தமிழக அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைப் போல, காமராஜர் பல்கலைக்கழகத்தையும் அரசு பல்கலைக்கழகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடிய வருமானத்தைத் தமிழக அரசே நிர்வகிக்க வேண்டும். அதன் அடிப்படையில் எங்களது வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும். பல்கலைக்கழக வருமானம், துணைவேந்தர்களால் பராமரிக்கப்படுவதுதான் இங்கு பிரச்னையாக உள்ளது.

இதன் காரணமாக, பல்கலைக்கழகத்தின் வருமானம் குறித்து தமிழக அரசு கேள்வி கேட்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆகையால், தமிழக அரசு பல்கலைக்கழகத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே சங்கங்களின் வேண்டுகோள். இதற்காக உயர்மட்டக்குழு அமைத்து உடனடித் தீர்வு காண வேண்டும். இப்போதைக்கு, தற்காலிகத் தீர்வை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் வழங்க வேண்டும். அவர் வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்கத்தின் துணைத் தலைவர் ஜபருல்லா கூறுகையில், "இந்தப் பல்கலைக்கழகத்தில் 33 ஆண்டுகளாகப் பணியாற்றி, துணைப் பதிவாளராக ஓய்வு பெற்றேன். தமிழகத்தின் 2-வது பல்கலைக்கழகமாக 1966-ல் தொடங்கப்பட்டது காமராஜர் பல்கலைக்கழகம். ஏறக்குறைய 57 ஆண்டுகளைக் கடந்து விட்டது.

எத்தனையோ துணைவேந்தர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். அவர்கள் காலத்தில் பல நல்ல விசயங்கள் நடைபெற்றுள்ளன. தற்போதைய துணைவேந்தர் குமார் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகின்றன. பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அறிந்தே துணைவேந்தர் பொறுப்புக்கு அவர் வந்தார். ஓய்வூதியர் சங்கத்தில் ஆயிரத்து 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

குடும்ப ஓய்வூதியர்கள் மட்டும் ஏறக்குறைய 400 பேர் ஆவர். ஒட்டுமொத்த ஓய்வூதியர்களும் தற்போது கடும் மன உளைச்சலில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 ஓய்வூதியர்கள் இறந்துள்ளனர். இதனைத் துணைவேந்தர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இதற்காக ஒரு வருத்தம் கூட அவர் தெரிவிக்கவில்லை.

ஆகையால் தமிழக அரசு காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். துணைவேந்தரிடன் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சர்கள், முதல்வரைச் சந்தித்து முறையிடுங்கள் எனக் கூறினோம். நம் பிரச்னைகள் குறித்து அவர்களிடம் தெரிவியுங்கள் எனப் பலமுறை தெரிவித்தும், இதுவரை எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை.

இந்தப் போராட்டம் மேலும் வலிமை மிக்கதாக மாறுமானால், பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் மிகப் பெரும் பாதிப்பு ஏற்படும். தமிழக முதலமைச்சரும், துணைவேந்தரும் தக்க நடவடிக்கை எடுக்க இந்தப் போராட்டத்தின் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மலர் விவசாயத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கீடு செய்தது ஏமாற்றம் அளிக்கிறது" - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.