ETV Bharat / state

சென்னை சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்த சோகம்! - ROAD ACCIDENT IN CHENNAI

சென்னையில் நடந்த சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (Photo Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 7:30 PM IST

சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் வாலிபர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பார்த்தசாரதி தெரு பகுதியில் வசித்து வருபவர் புவனேஸ்வர்(27),இவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சியில் பி சி ஆர் பிரிவில் இயக்குனராக பணியாற்று வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை ஷிப்டில் பணிபுரிவதற்காக அதிகாலையில் தம்முடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவர் அசோக் நகர் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே தவறான பாதையில் வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக புவனேஸ்வரின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே புவனேஸ்வர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார் அவரது உடலை மீட்டு அரசு ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் புவனேஸ்வர் உறவினர்கள் மற்றும் சென்னையில் உள்ள ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்தில் கால் முறிவு ஏற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.