தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹக்கீம் (42). இவர் தஞ்சாவூர் அய்யம் பேட்டையை தலைமை இடமாக கொண்டு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில், பெருமளவு முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து முதலீட்டாளர்களின் பணத்தை எடுத்துக் கொண்டு இவரும் இவரது மனைவி பாத்திமா நாச்சியார் என்பவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு தலைமறைவாகி விட்டார்கள்.
இது சம்பந்தமாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு தொடரப்பட்டு இருவரையும் போலீசார் தேடி வந்தனர். பின்னர் இந்த வழக்கானது தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி முத்துக்குமார் விசாரித்து வந்தார்.
இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்ட ஹக்கீம் என்பவர் கோயம்புத்தூரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் செந்தமிழன், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர் தேடிச் சென்று அவரை கைது செய்து தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவிற்கு அழைத்து வந்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இவர் இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் இன்று மதுரை பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "12.50 ரூபாயில் எம்.டெக் படித்தேன்"; சென்னை ஐஐடிக்கு 228 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் பெருமிதம்! - IIT Alumnus Dr Krishna Chivukula