சென்னை: சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள், மால்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இமெயில் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றனர். சில நேரங்களில் தனிநபர் பெயரிலும், காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரிலும் போலியான இணையதள முகவரியை உருவாக்கி, அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இந்தியா முழுவதும் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலிலேயே நாடு முழுவதும் பிரபலமான வணிக வளாகங்களிற்கும் மிரட்டல் இமெயில் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ஷாப்பிங் மால் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் ஷாப்பிங் மாலில் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அவ்வப்போது பீதியை ஏற்படுத்தி வரும் சைபர் கிரிமினல்ளைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம்.. டீக்கடையில் மாமூல் கேட்டு தாக்குதல்.. சென்னை க்ரைம் நியூஸ்! - Chennai Crime