ETV Bharat / state

தனியார் சிட் ஃபண்ட் ஓனர் கைது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. கும்பகோணத்தில் பரபரப்பு! - SURYA CHIT FUND OWNER ARREST

கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில், உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைதான சிட் ஃபண்ட் உரிமையாளர்
கைதான சிட் ஃபண்ட் உரிமையாளர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2024, 1:28 PM IST

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி பல லட்சம் மோசடி செய்த புகாரின் பேரில், உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இதே போன்று 40க்கும் மேற்பட்டோர் இந்த நிதி நிறுவனம் மீது மோசடி புகார் அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் தனலட்சுமி நகரில் வசித்து வருபவர் சந்திரமோகன் (48). இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஜான் செல்வராஜ் நகரில் சூர்யா சிட்ஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இதில், திருவிடைமருதூரைச் சேர்ந்த முரளி என்பவர் ரூபாய் 7.5 லட்சம் வைப்புத் தொகையாக முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை முதிர்வு காலம் கடந்த பிறகும் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், இது குறித்து முரளி கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையும் படிங்க: உச்சமடைந்த வரதட்சணை கொடுமை.. திருமணமான ஆறே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு.. வெளியான பகீர் ஆடியோ!

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், உரிமையாளர் சந்திர மோகனை கைது செய்து அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

சந்திரமோகன் இதே போன்று மேலும் பல வாடிக்கையாளர்களிடம் பல லட்ச ரூபாய் அளவிற்கு பெரிய அளவில் நிதி மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து சந்திரமோகன் மீது 40க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்தும் போலீசார் விசாரணை தொடர்ந்து வருகின்றனர். நிதி நிறுவன மோசடியில் உரிமையாளர் சந்திரமோகன் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று கும்பகோணத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.