ETV Bharat / state

"பெண்கள் உறங்கும் பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்" - கோவையில் லதா சுந்தரம் பேச்சு!

Women's Day Celebration: கோவையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் விருது பெற்ற லதா சுந்தரம், பெண்கள் உறங்கும் பொழுதுகூட விழிப்புடன் இருக்க வேண்டும், அப்படிபட்ட நாட்டில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 4:57 PM IST

Updated : Mar 8, 2024, 5:27 PM IST

கோவை
கோவை
"பெண்கள் உறங்கும் பெழுது கூட விழிப்புடன் இருக்க வேண்டும்" - கோவையில் லதா சுந்தரம் உரை!

கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் நர்சிங் கல்லூரியில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கே.ஜி குழுத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்த மகளிர் தின விழாவில், சமூகப் பணிக்காக குடியரசுத் தலைவர் விருது பெற்ற லதா சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய லதா சுந்தரம், “Women என்பதிலேயே Men இருப்பதால், இந்த நாள் ஆடவர்களுக்குமான நாள். உலகிலேயே சிறந்த செவிலியர்கள் இந்தியாவில் இருந்துதான் வருவதாக கூறுகிறார்கள். பெண்களின் ஸ்டேட்டஸ் வைத்துதான் அந்நாட்டின் ஸ்டேட்டஸ் நிர்ணயிக்கப்படுகிறது. நான் அளிக்கும் மோட்டிவேஷன் பேச்சுகள், ஒரு நாள் முழுக்கவும் அளித்தாலும் உங்களுக்கு வராது. அதனை உங்களுக்குள் நீங்கள்தான் வர வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் ஒவ்வொருவருக்கும் கல்வி என்பது மிக முக்கியமோ, அதேபோல் சுயமரியாதை என்பதும் மிகவும் முக்கியம். நாம் நமது சொந்தக் காலில் நிற்கும் பொழுதுதான் அந்த சுயமரியாதை என்பது கிடைக்கும். நம்மைப் பற்றி நெகட்டிவாக யாரேனும் பேசினால், அவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு, அதனை பாசிட்டிவாக்கி வேலை செய்தாலே போதும், நாம் உயர்ந்த நிலையை அடைந்து விடுவோம்.

நம்முடைய பாதுகாப்பை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். உறங்கும் பொழுதுகூட பெண்கள் விழிப்புடன்தான் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறதோ, அந்த ஆண் அனைத்து பெண்களிடமும் தன்மையுடன் நடந்து கொள்கிறான்" எனப் பேசியதோடு, அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு தடங்கல்களையும், அதிலிருந்து அவர் சாதித்து வந்ததையும் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த லதா சுந்தரம், "வெற்றி பெற்ற அனைத்து பெண்களுக்குப் பின்னாலும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களுக்கு ஆண்கள் உதவியாக இருந்தால், பெண்கள் அனைவரும் அதிகமாக சாதிக்கலாம். பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.

இந்தியா வல்லரசு நாடு ஆக வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்கள் முன்னேற்றத்திற்கான பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து பெண்களும் கண்டிப்பாக கல்வி கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். நம்முடைய கடமைகளை வீட்டில் மட்டுமல்லாமல், சமுதாயத்திலும் செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தலுக்காக காத்திருக்கும் தங்கலான்.. பா.ரஞ்சித் கொடுத்த புதிய அப்டேட்!

Last Updated : Mar 8, 2024, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.