ETV Bharat / state

"தமிழகத்தில் தொடர்ந்து பட்டியலின மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்! - BSP leader Armstrong murder

BSP leader Armstrong murder: பட்டியலின சமூக மக்களின் பாதுகாவர்கள் எனச் சொல்லும் திமுக அரசின் ஆட்சியில் தான் பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 6:28 PM IST

Updated : Jul 7, 2024, 7:24 PM IST

தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற தேமுதிக தொண்டர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், முதலமைச்சரின் சொந்த தொகுதியில் கூலிப்படையால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல படுகொலைகள் நடந்துள்ளன. கடந்த மூன்று மாதத்தில் 6 படுகொலை நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி காங்கிரஸ் தலைவர் கொலையில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை‌‌. ஆம்ஸ்ட்ராங் கொலையில் 8 பேரும் கைது செய்யப்படவில்லை. அவர்களாகவே சரண்டர் ஆனார்கள். ஆனால், காவல்துறை கைது செய்ததாக தவறாக சொல்கிறார்கள்‌.

கள்ளக்குறிச்சியில் 70 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். இந்த கொலை, உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் எல்லாம் பட்டியலின மக்களுக்கு தான் நடந்து வருகிறது. மேலும், திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன், செல்வப்பெருந்தகை இருவரும் கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என சொல்கின்றனர். பட்டியலின சமூக மக்களின் பாதுகாவலர்கள் என சொல்லும் திமுக அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தலில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 40க்கு 40 தொகுதிகள் வென்றெடுத்ததாக முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், பட்டியல் சமூக மக்களுக்கு தினமும் சேதாரம் ஏற்படுகிறது. கள்ளக்குறிச்சியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்கள் திமுகவினர் தான் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அதிக அளவில் போதைப்பொருள் புழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும். அதனால் உயிரிழப்புகள் ஏற்படாது, விவசாயிகளுக்கும் வருவாய் கிடைக்கும்" என்றார்.

பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், "இந்த தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறோம். தமிழகத்தில் எல்லாத் தேர்தலிலும் தேமுதிக போட்டியிட்டது. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில், திமுக பணம், அதிகாரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அராஜகம் செய்து, வெற்றி பெற்றனர்.

ஆனால், இதை நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் நாங்கள் போட்டியிடவில்லை" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “கஞ்சா விற்பவர்களுக்கு பாதுகாப்பு உள்ளது.. ஆனால்..” பூவை ஜெகன்மூர்த்தி கேள்வி!

Last Updated : Jul 7, 2024, 7:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.