ETV Bharat / state

"தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும்" - பிரேமலதா விஜயகாந்த்! - Vijayakanth Birthday - VIJAYAKANTH BIRTHDAY

Vijayakanth Birthday: தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் எனவும், கடலூரில் தேமுதிக கொடி ஏற்றும் பொழுது நடைபெற்ற சம்பவத்திற்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 4:17 PM IST

சென்னை: மறைந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளையொட்டி, இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சி அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, அவரது முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்து கண்ணீருடன் மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அவரது மகன்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பிரேமலதா விஜயகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "இனி தேமுதிக தலைமை அலுவலகம் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. பெண்கள், அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. பெண்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

விஜயகாந்த் இல்லத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு முன்னறிவிப்பின்றி திரும்பப் பெறப்பட்டுள்ளது. காவலர்கள் பாதுகாப்பு ஆளுங்கட்சி இருக்கும் இடங்களில் மட்டும் அமர்த்தி உள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெண் அரசியல் தலைவர்களுக்கு இருப்பது இல்லை. பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும். சென்னை சாலிகிராமத்தில் 2 பெண் தலைவர்கள் இருக்கிறோம். விஜயகாந்த் வாழ்வதற்காக ஆசையாக கட்டப்பட்ட இல்லம் வெகுவிரைவில் திறக்கப்படும்.

தவெக கொடி விவகாரம்: விஜய் கட்சிக் கொடி அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தி கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் இடம் பெற்றுள்ளார். அது தொடர்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக என்னைச் சந்தித்தார். கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தின் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளது. முழுவதுமாக முடிக்கப்பட்டு சிறப்புக் காட்சிகள் காண்பிப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திமுக - பாஜக ரகசிய உறவு: திமுகவும் - பாஜகவும் எலியும் பூனையூமாக இருந்தனர். தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நாணயம் வெளியிட்டுள்ளனர். நாணயம் வெளியிடுவதில் தேமுதிகவிற்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

இருப்பினும், திமுகவின் பி டீம் தான் பாஜகவா என்ற கேள்வியை மக்கள் கேட்கின்றனர். விஜய பிரபாகரனுக்கு கட்சியில் உரிய நேரத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை செய்து உரிய பதவி வழங்கப்படும். மேலும், உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க அனைத்து பணிகளும் தேமுதிக சார்பில் நடைபெற்று வருகிறது.

கார் பந்தயம்: சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சாலைகள் மோசமான நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையில் கார் ரேஸ் நடத்துவது தேவை தானா என்பதை அரசு யோசிக்க வேண்டும். ரேஸ் நடத்துவதற்கான இடங்கள் தனியாக இருக்கின்ற போது, நகரின் மையத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்ற ஒன்று.

ஸ்டாலின் வெளிநாடு சென்று முதலீடு பெற்று வந்தால் அதனை வரவேற்கிறேன். ஆனால், அதே நேரத்தில் அவர் எதற்காக செல்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும், அவர் நலமுடன் திரும்பி வரட்டும். கடலூரில் தேமுதிக கொடி ஏற்றும் பொழுது நடைபெற்ற சம்பவத்திற்கு தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இறந்தவர் குடும்பத்திற்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தொண்டர்கள் இனிமேல் கட்சிக்கொடி ஏற்றும்பொழுது பாதுகாப்பாக செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! - Vijayakanth Birthday

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.