ETV Bharat / state

"ராசிமணல் பகுதியில் அணை கட்டுவதற்கு விஜயின் ஆதரவை பெறவுள்ளோம்" - பி.ஆர்.பாண்டியன்! - Rasimanal Dam Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 6:32 PM IST

P.R.Pandian: நடிகர் விஜயை சந்தித்து காவிரி நீர் விவகாரம் குறித்தும் விவசாயிகள் நிலை குறித்தும் தெரிவித்து, ராசிமணல் பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவரது ஆதரவு திரட்ட உள்ளோம் என்று தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

நடிகர் விஜய் மற்றும் பி.ஆர்.பாண்டியன்
நடிகர் விஜய் மற்றும் பி.ஆர்.பாண்டியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சேலம்: காவிரி ஆற்றின் குறுக்கே ராசிமணல் எனும் பகுதியில் காமராஜரால் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அணைகட்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தக் கோரி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளித்தனர்.

பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாய சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், "கர்நாடக அரசு உபரிநீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிட்டு கணக்கு காட்டுகிறது. தற்போது அந்த உபரிநீரை தடுக்கவும் மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வருகிறது.

இதனைத் தடுத்து ராசிமணல் எனும் பகுதியில் அணை கட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு, உபரிநீர் வீணாக கடலுக்குச் செல்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கர்நாடகாவில் தேசிய கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்வதால், தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ராசிமணல் பகுதியில் அணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தினர் தரப்பில், தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து காவிரி நீர் விவகாரம் குறித்து ஆதரவு திரட்ட உள்ளோம்.

குறிப்பாக, நடிகர் விஜயைச் சந்தித்து விவசாயிகள் நிலை குறித்து தெரிவித்து, அவரது ஆதரவு திரட்ட உள்ளோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும். தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாததால், தமிழ்நாட்டில் விவசாயத்தை ஒழிக்க முயற்சிக்கிறது" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஹேமா கமிட்டி அறிக்கை; ஆவேசமடைந்த ஜீவா.. பிரஸ் மீட்டில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.