ETV Bharat / state

கழிவுநீர் குழாய் தொடர்பாக பிரச்னை.. மநீம நிர்வாகி தாக்குதல்? பெண் பகீர் புகார்! - Makkal Needhi Maiam

MNM MEMBER FIGHT: பொள்ளாச்சி அருகே கழிவுநீர் குழாயை அடைத்து வைத்ததாக மக்கள் நீதி மய்யம் உறுப்பினரை தட்டி கேட்டவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட நித்திய பிரியா
பாதிக்கப்பட்ட நித்திய பிரியா (credit -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 18, 2024, 6:38 PM IST

Updated : Aug 18, 2024, 7:04 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் பகுதியில் நித்திய பிரியா என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு வீடு வாங்கியுள்ளார். அவர் வீட்டின் அருகில் வசிக்கும் பாவா என்பவர், அவரது வீட்டின் முன்புறம் உள்ள கால்வாயில் கழிவு நீர் தேங்குவதாகக் கூறி, நித்திய பிரியா வீட்டு கழிவு நீர் குழாயை அடைத்ததாக கூறப்படுகிறது.

நித்திய பிரியா பேட்டி (Credit -ETVBharat TamilNadu)

இதனையடுத்து, நித்திய பிரியா காவல் நிலையம், சார் ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் பலமுறை அடைக்கப்பட்டுள்ள கால்வாயை திறந்து விட்டுள்ளனர். ஆனால், தொடர்ந்து கழிவு நீர் குழாயை பாவா அடைத்துள்ளதாக தெரிகிறது.

இதனால் நித்யபிரியா கிராம சபை கூட்டத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவர் சஹர்பானுபைசல், துணைத்தலைவர் லட்சுமி சிவசாமி, சுகாதாரத்துறை அதிகாரி சுதாகர் கழிவு நீர் குழாய் அடைப்பை நீக்கினர்.

அப்போது, அங்கு வந்த மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைத் தலைவர் பாவா (எ) கமல் பாவா, அங்கிருந்த ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் முன்னிலையில், பொதுமக்கள் மத்தியில் அப்படித்தான் அடைப்பேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர்களை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்து காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணைத் தலைவர் லட்சுமி சிவகாமி, பாவா ஒருமையில் பேசியதாக ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “கடந்த 6 மாதங்களுக்கு முன் வீடு வாங்கினேன். மக்கள் நீதி மய்யம் நிர்வாகியான பாபா மொய்தீன் வீட்டின் முன் வழியாக கழிவு நீர் செல்வதால், கடந்த 3 மாதமாக குழாயை அடைத்து வைத்துள்ளனர். இதனால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் கொடுத்து, அடைப்பை எடுத்து விடப்பட்டாலும் மீண்டும் பாபா மொய்தீன் குழாயை மூடுகிறார்.

தற்போது இதனை எதிர்த்து கேட்டதற்கு எனது தாய் மற்றும் அண்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நித்திய பிரியா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்ப்பிணி சென்ற கார் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. சென்னையில் நடைபெற்ற பல்வேறு விபத்துகள்! - govt bus collided with car

Last Updated : Aug 18, 2024, 7:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.